உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கிளை செயலர் வீட்டில் புடவைகள் பறிமுதல்

தி.மு.க., கிளை செயலர் வீட்டில் புடவைகள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தி.மு.க., கிளைச் செயலர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புடவை, வேட்டி, சட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, கோலியனுார் ஒன்றியம், ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். தி.மு.க., கிளைச் செயலர். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க, புடவைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொகுதி தேர்தல் அலுவலருக்கு புகார் வந்தது.அதைத் தொடர்ந்து நேற்று, இடைத்தேர்தலுக்கான நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் இளையராஜா தலைமையில் அதிகாரிகள் ராமலிங்கம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த புடவைகள், வேட்டி, சட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதையறிந்த, அங்கிருந்த பா.ம.க., நிர்வாகிகள், ஆசாரங்குப்பம் கிராமத்தில் சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புடவைகள் உள்ளிட்ட துணிகளை எடுத்து வந்து தெருவில் கொட்டி, கோஷம் எழுப்பினர். தேர்தல் அதிகாரிகள் தெருவில் கொட்டப்பட்ட புடவைகளையும் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட பா.ம.க., செயலர் பாலயோகி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தி.மு.க., வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த டி.எஸ்.பி.,க்கள் சுரேஷ், சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் காணை போலீசார் பா.ம.க.,வினரிடம் பேசி சமாதானம் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட புடவைகளை, நிலைக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள், தொகுதி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின் அது கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, பா.ம.க., வழக்கறிஞர் பாலு, சிவகுமார் எம்.எல்.ஏ., மற்றும் கட்சியினர், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் பழனியை நேற்று சந்தித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

D.Ambujavalli
ஜூலை 04, 2024 16:31

புடவை மட்டும்தான் பிடிபட்டதா? எத்தனை 500 , 200 கட்டுகள் மறைத்து வைக்கப் பட்டு இருக்கிறதோ? என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? முதல்வர்தான் குரல் காட்டுவாரா ? கமிஷனை 'சற்றே அடங்கியிரும் பிள்ளாய் என்று அடக்கி வைத்திருக்கிறது ஆளும் அரசு


Anantharaman Srinivasan
ஜூலை 04, 2024 11:24

புடவைகள் சட்டைகள் பிடிபட்டதோடு சரி. மேல் நடவடிக்கை, தண்டனை எதுவும் இருக்காது. அது தான் நம் தேர்தல் கமிஷனின் பவர்..


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 10:38

ஜனநாயக முறையில் திமுக வை ஒழிப்பது நடக்காத காரியம். அது குடும்ப அராஜககார்ப்பரேட். இடி அமீன் வாரிசுகள். நிரந்தர ஜனாதிபதி ஆட்சிக்கு அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். இல்லையெனில் பழைய காஷ்மீர் போல ஆகிவிடும்.


shan
ஜூலை 04, 2024 10:35

கொள்ளையடிக்கிற கசின் ஒரு தூசியை ஓட்டுக்கு கொடுத்து ஏமாந்தாதான்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 04, 2024 09:29

மக்கள் எங்க மேல வைத்த நம்பிக்கையின் எதிரொலிதான் நாற்பதுக்கு நாற்பது ன்னு உருட்டிய தமிழ்த்தேச மன்னர் புலிகேசிக்கு அசிங்கம் ......


S. Narayanan
ஜூலை 04, 2024 09:28

இது பற்றி முதல்வருக்கு நிச்சயம் எதுவும் தெரியாது என்பதால் யாரும் கேக்க வேண்டாம்


raja
ஜூலை 04, 2024 09:02

தப்பு தப்பு தப்பு... எங்க கிளை செயலாளர் வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புடவையாய் கட்ட வாங்கி வச்சு இருந்தாரு...அத போய் இப்படி சொல்றீங்களே....


Durai Kuppusami
ஜூலை 04, 2024 07:09

இது அவங்க மாடல்.. ஜனங்க வாங்கறாங்களே அவஙகளுக்கு சுத்தமா புத்தி இல்லை... என்ன செய்வது


pandit
ஜூலை 04, 2024 06:47

நாளை கழகக்காரர்கள் காவல் நிலையத்திலிருந்து இதே புடவைகளை வினியோகம் செய்வார்கள்.


Mani . V
ஜூலை 04, 2024 06:42

கள்ளச் சாராயம் விற்பவனும் நம் ஆள், கனிமவளம் கடத்துபவனும் நம் ஆள், ரேஷன் அரிசி கடத்துபவனும் நம் ஆள், பிரியாணிக் கடையில் சண்டை போடுபவனும் நம் ஆள், புடவைகள் பதுக்குபவனும் நம் ஆள். நம் ஆட்கள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி