உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு கொடுத்த நிதிக்கு கணக்கு காட்டாத தி.மு.க., எச்.ராஜா குற்றச்சாட்டு

மத்திய அரசு கொடுத்த நிதிக்கு கணக்கு காட்டாத தி.மு.க., எச்.ராஜா குற்றச்சாட்டு

காரைக்குடி:''மத்திய அரசு கொடுத்த நிதிக்கு கணக்கு காட்டாத தி.மு.க.,வை அப்புறப்படுத்த வேண்டும்,'' என, காரைக்குடியில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.அவர் மேலும் கூறியதாவது: தமிழகம், ஆந்திரா உட்பட பல இடங்களில் கூட்டுறவு வங்கிகளில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தவறாக சம்பாதித்த பணத்தை கூட்டுறவு வங்கியில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பேரில் இச்சோதனை நடந்து வருகிறது.தி.மு.க., எதைத்தொட்டாலும் ஊழல். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு பேரிடர் நிதி ரூ.5 ஆயிரத்து 950 கோடி வழங்கியதற்கு கணக்கு கேட்டார். இதுவரை தி.மு.க., கணக்கு காட்டவில்லை. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு கொண்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை