உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சி ஒரு பொய்யாட்சி: பன்னீர்செல்வம்,

தி.மு.க., ஆட்சி ஒரு பொய்யாட்சி: பன்னீர்செல்வம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சி என்பது, மக்களை வாட்டி வதைக்கிற ஆட்சியாக, மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத ஆட்சியாக உள்ளது. போதையில் மூழ்கியுள்ள ஆட்சியாக, சாராய ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிற நிலையில், தி.மு.க., ஆட்சி 'செயலாட்சி' என, முதல்வர் பதிவு செய்திருப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது.மின் கட்டணம் இரு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாய்; டீசல் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற தி.மு.க., வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கல்விக்கடன் ரத்து, 'நீட்' தேர்வு ரத்து, ஏழை மக்கள் பசி தீர்க்க, 500 இடங்களில் உணவகம், புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் என்றெல்லாம், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வூதிய பலன்களையே அளிக்காத அவல நிலை நிலவுகிறது. இந்த அவலத்தையே செயலாட்சி என, முதல்வர் சொல்கிறாரா?பட்டாசு ஆலையில் அடிக்கடி விபத்து, உயிரிழப்பு, அன்றாடம் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் நடக்கிறது. தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது.தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது செயலாட்சி அல்ல; செயலற்ற ஆட்சி; பொய்யாட்சி.- பன்னீர்செல்வம்,முன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sampath Kumar
மே 13, 2024 09:26

உங்க ஆட்சி மட்டும் என்ன மெய் ஆட்சியை நீக்கலேஒரு டம்மி நீக்க நடத்துராட்சியும் ஒரு டம்மி அப்புறம்மெய் எப்படி வரும் ?போங்க சார் கோவம் வரமாதிரி காமடி பண்ணாதீங்க


Svs Yaadum oore
மே 13, 2024 07:31

பட்டாசு ஆலையில் அடிக்கடி விபத்து, உயிரிழப்பு, அன்றாடம் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் நடக்கிறது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது இதெல்லாம் உண்மைதான் ஆனால் இதை மக்களிடேயே எடுத்து சொல்லி இதற்கு தீர்வு காண அ தி மு க என்ன செய்தது? எடப்பாடி ஆட்சியில் இருந்தபோதும் அ தி மு க அரசுக்கு எதிரான போலி பிரச்சாரத்தை வேடிக்கை பார்த்தது இப்பொது இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கும்போதும் அ தி மு க எதிர்க்கட்சியாக செயல்படாமல் வேடிக்கை பார்க்கிறது


Siva
மே 13, 2024 07:30

இவர் செய்த காலத்தில் ஜால்ரா ஆட்சி தனக்கு சொத்து சேர்த்து மட்டும் இவரது சாதனை வாழ்க லஞ்சம் வளர்க ஊழல்வாதிதக்காளி


mindum vasantham
மே 13, 2024 07:25

கஞ்சா கேஸ் ஆட்சி


Senthoora
மே 13, 2024 06:27

ஆமா, நீங்க ஜெயலலிதா அம்மாவுக்குப்பின் இரட்டையர் சேர்ந்து கிழிச்சீங்க, இப்போ உங்களை துரத்தியே விட்டாங்க, இந்தலச்சணத்தில் மற்றவர்களை விமர்சிக்கவந்துட்டீங்க


Kasimani Baskaran
மே 13, 2024 05:26

நடப்பது ஆட்சியல்ல வெறும் காட்சி வாய் பேசினாலேயே குண்டாஸ் பாயும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை