உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்கும் தி.மு.க., செல்லுார் ராஜூ திடீர் கரிசனம்

நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்கும் தி.மு.க., செல்லுார் ராஜூ திடீர் கரிசனம்

மதுரை:''நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தி.மு.க., அரசு தடுக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கிறது,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: கள்ளர் சீரமைப்பு துறையை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு துறையை மூட எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. 'விமர்சனத்திற்கு ஓர் எல்லை வேண்டும்' என சொன்ன அண்ணாமலை, தி.மு.க.,வினரை மிக கேவலமாக பேசி உள்ளார். அலைபேசியில் வந்த அழைப்பின்படி, கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் ஓடோடி சென்று பங்கேற்றுள்ளார். திராவிட கட்சிகளை விமர்சித்த அண்ணாமலை, தற்போது தி.மு.க.,வையும் கருணாநிதியையும் புகழ்ந்து பேசி மாட்டிக் கொண்டார்.அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருகிறார். நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவில்லை. ஓர் இளைஞர் அரசியலுக்கு வருவதை தி.மு.க., அரசு தடுக்கிறது.தமிழகத்தில் தி.மு.க., தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக்கூடாது என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் நினைக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏன் தி.மு.க., அரசு அனுமதி மறுக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை