| ADDED : ஆக 01, 2024 10:55 PM
மத்திய அரசு பட்ஜெட்டில், தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டும் தி.மு.க., அரசு, அதை தட்டிக்கேட்க தவறி விட்டது. பெரும் தொழில் அதிபர் ஒருவர், முதல்வரின் மருமகனை சந்தித்து பேசி உள்ளதன் காரணத்தை முதல்வர் ஸ்டாலின் சொல்ல வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் 10 முதல் 15 சதவீத அளவுக்கு குற்றச் சம்பவங்கள் நடந்திருந்தால், இன்றைக்கு நூறு சதவீத அலவுக்கு நடக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறிவிடும். அடுத்தும் தி.மு.க., ஆட்சி என்றால், அதில் இடம் வேண்டும் என காங்., கேட்கிறது. வி.சி.,க்களும் கம்யூ.,க்களும் வெளிப்படையாக ஆட்சிக்கு எதிராக கொடிபிடிக்கின்றனர். அதனால் கூட்டணி கட்சியினர், தி.மு.க.,வை விட்டு வெளியேறக்கூடும். அப்படி நடந்தால், அக்கட்சிகள் அ.தி.மு.க., பக்கம் தான் வருவர். இது ஆரூடம் அல்ல; நடக்கப் போவது. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,