உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்ரன்டிஸ்ஷிப் பயிற்சியுடன் இன்ஜி., படிப்புகள் அறிமுகம் ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பு

அப்ரன்டிஸ்ஷிப் பயிற்சியுடன் இன்ஜி., படிப்புகள் அறிமுகம் ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பு

சென்னை:'இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பு பிரச்னையை தீர்க்கும் வகையில், 'அப்ரன்டிஸ்ஷிப்' பயிற்சியுடன் பட்டப்படிப்புகள் நடத்தப்படும்' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்து உள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு:நாடு முழுதும் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 15 லட்சம் பேர் இன்ஜினியரிங் பட்டம் பெறுகின்றனர். ஆனால், 2.5 லட்சம் பேர் மட்டுமே, இன்ஜினியரிங் சார்ந்த பணிகளில் சேருகின்றனர். இதை நாஸ்காம் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.இதற்கான முக்கிய காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதில், இன்ஜினியரிங் பட்டதாரிகள், படிப்பு சார்ந்த திறனை வளர்த்து கொள்ள வேண்டிய தேவை இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், 'அப்ரன்டிஸ்ஷிப்' என்ற தொழில் பழகுனர் பயிற்சியை கல்லுாரி படிப்புடனே வழங்கலாம் என்று, முடிவெடுக்கப்பட்டு உள்ளது.தொழில் பழகுனர் பயிற்சி அளிப்பதால், படிப்பை முடிக்கும் முன்பே, மாணவர்களின் திறன் மேம்படுகிறது. தொழில் துறைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுகிறது. தொழில் துறையின் தேவைகளை அறிந்து, பாடத்திட்டங்களில் கூடுதல் அம்சங்களை சேர்க்கலாம். மாணவர்களுக்கு கூடுதல் திறன்களை கற்றுத் தரலாம்.கல்லுாரி வளாகங்களுக்கு நேர்காணல் நடத்த வரும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்னை குறையும். தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான திறன் வாய்ந்தவர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.இதுபோன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், அப்ரன்டிஸ்ஷிப் பயிற்சியுடன் கூடிய பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான வரைவு அறிக்கை மற்றும் விதிகள், https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வியாளர்கள், தொழில் நிறுவனங்கள் தங்களின் கருத்துகளை, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு ஆன்லைன் வழியில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை