உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனவு இல்லம் திட்டத்திற்காக பிரதமர் வீடு திட்டம் முடக்கம்

கனவு இல்லம் திட்டத்திற்காக பிரதமர் வீடு திட்டம் முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை:தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்திற்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை முடக்குவதாக புகார் எழுந்துள்ளது.பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பட்டா நிலத்தில் 270 முதல் 300 சதுர அடியில் வீடு கட்டிக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.1.20 லட்சம் நிதி வழங்குகிறது. வேலை உறுதி திட்டம் மூலம் அந்த வீட்டில் ரூ.12,500 செலவில் கழிப்பிடம் கட்டித்தரப்படும். தமிழகம் முழுதும் பல இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் கனவு இல்லம் வருகை

இந்நிலையில் தமிழக அரசு 2030 ம் ஆண்டிற்குள் குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் கான்கிரீட் வீடுகள் கட்டும் கனவு இல்லம் திட்டத்தை' அறிமுகம் செய்துள்ளது. நடப்பாண்டு 1 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டிற்கு தலா ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். ஜூலை 15 க்குள் பயனாளிகளை தேர்வு செய்து வீடு கட்டுவதற்கான அனுமதி கடிதத்தை வழங்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது குறித்த அவசர கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.

இணையதளம் முடக்கம்

பிரதமர் வீடு திட்டத்தில் ஆய்வுக்குப்பின் பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படும். வீடு கட்டி முடித்த பயனாளிக்கு மத்திய அரசின் பங்கு தொகை ரூ.1.20 லட்சம் வங்கி கணக்கிற்கே சென்றுவிடும். ஆனால், மாநில அரசின் பங்கு தொகையான ரூ.1.20 லட்சத்தை பெற அதிகாரிகள் ஒரு முனை கணக்கு (சிங்கிள் நோட் அக்கவுண்ட்) இணையதளத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் ஜூன் 11 ல் இருந்து முடக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே மார்ச் வரை வீடு கட்டிய பயனாளிக்கு தேர்தல் நடத்தை விதியை கூறி மாநில அரசு பங்களிப்பு தொகை ரூ.1.20 லட்சத்தை விடுவிக்கவில்லை. தற்போது மாநில அரசின் பங்களிப்பு தொகையை இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு ரூ.935 கோடி பாக்கி இருப்பதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Dharmavaan
ஜூலை 03, 2024 09:35

மானம் கெட்ட தமிழ் நாட்டு கூட்டம் யோகியனுக்கு ஒட்டு போடாமல் திருடனுக்கு கமிஷன் அடிப்பவனுக்கு ஒட்டு போடுகின்றன .மாநில அரசின் தொகையில் கமிஷன் பார்ட்டி ஆள் எவ்வளவு


prathab
ஜூலை 03, 2024 08:56

திரவிடிய மாடல் இருக்கும் வரை இப்படிதான் இருக்கும்.. ஓட்டு போடும் போது இதெல்லாம் உங்களுக்கு மறந்து போயிரும்... ஸ்டாலின் தான் வராரு வ..... தரரு... கேடு கெட்ட மக்கள் இருக்கும் வரை இவனுங்க அப்டித்தான்...


Bala Paddy
ஜூலை 03, 2024 08:33

இதெல்லாம் வேலைக்கு ஆகாது. இந்த திருட்டு திராவிடியா கூட்டத்தை ஜெயில்ல போட்டாதான் தமிழகம் தழைக்கும்.


விஸ்வநாத் கும்பகோணம்
ஜூலை 03, 2024 08:09

மத்தியில் ஆளும் கட்சி பாஜகவா அல்லது திமுக கூட்டணியா? மத்திய அரசின் அதிகார வரம்பு மாநில அரசை, அதன் அதிகாரத்தை உள்ளடக்கியதுதான். அவ்வப்போது மத்திய அரசு தமிழகத்தில் திமுக அரசுக்கு நினைவூட்ட வேண்டும். அதற்கு முனைப்பு காட்ட வேண்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் பாஜக காலூன்றலாம் நாற்காலி போட்டு உட்கார முடியாது.


பெரிய குத்தூசி
ஜூலை 03, 2024 08:05

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்குமேல் புதிய ரேஷன் கார்ட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சம் புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பங்கள் தமிழக திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை எதிர்கட்சி காரர்களும் பத்திரிக்கைகளும் கண்டும் காணாமல் உள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். புதிய ரேஷன் கார்ட் கொடுத்தால் மாத உரிமை தொகை 1000 வழங்கவேண்டும் என்ற காரணத்தால் திமுக அரசு புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பங்களை கிடப்பில் போட்டுள்ளது. அடிமைஉரிமைத்தொகை தேவையில்லாத புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பதாரர்கள் அதிகமாக உள்ளனர். தினமலர் தலையிட்டு இந்த பிரச்சினையை வெளிக்கொண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ரேஷன் கார்ட் கிடைக்க ஆவண செய்யவேண்டும் .


Barakat Ali
ஜூலை 03, 2024 07:33

டுமீலு நாட்டு சர்க்காரு பேருலயே செஞ்சி தலைமைக்குடும்ப கம்பெனி சிமெண்ட்டை ஒரு பர்சண்ட்டு யூஸ் பண்ணி எங்க பிசினஸை வளர்த்துக்கவும் உட மாட்டேன்றீங்க .... ஒன்றிய அரசு திட்டத்துல ஸ்டிக்கர் ஒட்டி பிராடுத்தனம் செஞ்சாலும் சிரிக்கிறீங்க ..... ஒன்றிய திட்டத்தை முடக்குனாலும் தப்புன்றீங்க .... என்னதான் பண்ணுறது ????


R.RAMACHANDRAN
ஜூலை 03, 2024 07:00

ஏழைகளுக்கு வீடு என்ற பெயரால் பணக்காரர்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டிக்கொள்ள நிதி அளித்துள்ளதையெல்லாம் இந்த நாட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை.பணக்காரர்களுக்கு அரசு 950 கோடி பாக்கி வைத்துள்ளதற்கு அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு செய்தி வெளியிடுகின்றனர் இந்த நாட்டில்.


சுராகோ
ஜூலை 03, 2024 08:33

அவதூறு பரப்புவது சுலபம். நீங்கள் bakki வைத்துள்ள எல்லா வீட்டையும் ஆராய்ந்து தான் சொல்கிறீர்களா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை