உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9,10ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பிலும் கருணாநிதி பாடம்

9,10ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பிலும் கருணாநிதி பாடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளை தொடர்ந்து, எட்டாம் வகுப்பு பாடத்திலும், கருணாநிதி குறித்த பாடம் இடம் பெற்று உள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பள்ளி பாடப் புத்தகங்களில், கருணாநிதி வாழ்க்கை வரலாறு குறித்த பாடம் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகள் பாடமாக சேர்க்கப்பட்டன.இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், உரைநடை பகுதியில், 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில், கருணாநிதி பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என்ற குறுந்தலைப்புகளின் கீழ், ஐந்து பக்கத்திற்கு அவர் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.அதேபோல், எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், பெண் உரிமை சார்ந்த சட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், கருணாநிதி பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விபரம்:பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்காக, 1956ம் ஆண்டு ஹிந்து வாரிசு உரிமை சட்டம் திருத்தப்பட்டு, 1989ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தம், 'ஹிந்து வாரிசு உரிமை சட்டம் - 1989' என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் வழியாக, தமிழகத்தில் ஹிந்து கூட்டுக்குடும்ப சொத்தில், பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதில், தமிழகம் முனைப்புடன் செயல்படுகிறது என்பதற்கு, 1989ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் ஓர் உதாரணமாகும். பின்னர் தேசிய அளவில், இத்தகைய திருத்தம், 2005ல் செய்யப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், சட்டசபையில் கருணாநிதி பேசும் படமும் இடம்பெற்று உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

kulandai kannan
மே 16, 2024 16:44

2026 தேர்தலுக்குப் பின் கருணாநிதியை திமுக கட்சி ஆபிசுக்குள் முடக்க வேண்டும்.


ராமகிருஷ்ணன்
மே 16, 2024 12:47

பல முகங்களில் களவாணி முகம் தான் பிரதானமாக தெரிந்த முகம், கேடுகெட்ட முகம்.


பாண்டியன்
மே 16, 2024 11:59

கட்டுமர ஊழல்களை ஆராய்ஞ்சு பி.ஹெச் டி வாங்கற அளவுக்கு விஷயம் இருக்கு.


N Sasikumar Yadhav
மே 16, 2024 10:34

தமிழக கல்வித்துறையை கெடுத்து குட்டிச்சுவராக்க ஒரு கேடுகெட்ட திராவிட மாடல். கருநாநிதி செய்த விஞ்ஞானரீதியான ஊழல் ஊழல்வழக்கை கைவிட கச்சத்தீவை தாரைவார்த்தது என அனைத்தும் பதிவிடுவார்களா


Rajarajan
மே 16, 2024 09:56

இதுமட்டும் போதாது அப்படியே


ஆரூர் ரங்
மே 16, 2024 09:00

பெண்களுக்கு சொத்துரிமை கேரளாவில் பல்லாண்டுகளாக (மருமக்கள் தாயம்)இருந்ததுதான். ஆந்திராவில் அமலானதைப் பார்த்துதான் தமிழகத்தில் சட்டமாக்கபட்டது. ஆக இது அடுத்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலை. இன்னொரு தகவல். தமிழ்நாட்டிலேயே இசை வேளாளர்கள் சமூகத்தின் ஒரு பிரிவில் பெண்களே சம்பாதித்து குடும்பத்தை நிர்வகித்ததுண்டு என்பர்.


Sampath Kumar
மே 16, 2024 08:48

நல்லது அவர் செய்த அணைத்து சமூக நீதி காத்து விஷயங்களையும் தொகுத்து நமது சந்ததியினருக்கு வழங்க வேண்டும் அப்போது தான் சமூகத்தை பீடித்து உள்ள ஆதிக்க சக்திகள் யாரு அவர்கள் தமிழ் சமுகத்தை எப்படி சீரழித்து உள்ளார்கள் அதற்கு எவர் என்ன என்ன செய்து உள்ளார் என்று ஹெய்சரிய வரும் வாழ்த்துக்கள் தமிழ்நாடு அரசுக்கு


ஆரூர் ரங்
மே 16, 2024 13:52

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர் அமைச்சர் இரண்டு எம்பி க்கள் கட்சித் தலைவர், இளைஞரணி மகளிரணி தலைமை என்பது ஆதிக்க மனப்பான்மையில்லையா? கட்சிக்கு எந்த நூற்றாண்டில் ஒரு சாதாரண பட்டியலின ஊழியர் தலைவராவார்?


vbs manian
மே 16, 2024 08:41

காமராஜர் வள்ளலார் சர் சி வி ராமன் வு வே சாமிநாத ஐயர் அரவிந்தர் ரமண மகரிஷி பற்றி பாடங்கள் உண்டா


GMM
மே 16, 2024 07:27

தமிழக இந்து கூட்டு குடும்ப அசையா சொத்தில் பெண்களுக்கு சம உரிமை கூட்டு குடும்ப உறவை சிதைத்து விட்டன ஒன்று வழக்கு அல்லது பிரிக்க முடியாமல் தாவா பெண்ணுக்கு கணவன் சொத்தில் பங்கு உண்டு கருணாநிதி குடும்பத்தில் இதனை செயல் படுத்த முடியுமா? கனிமொழி பெற்ற பங்கு எவ்வளவு?


The
மே 16, 2024 07:16

This is called T Model with T has different meanings


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ