உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பள்ளிகளில் மாணவர்களுக்கான கலைத்திருவிழாவில் பங்கேற்போர் பதிவு நேற்றுடன் முடிவதாக இருந்தது. தற்போது, இதற்கான அவகாசம்வரும், 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கலை போட்டிகளை இன்று துவங்கி, செப்., 10 வரை நடத்தலாம். வெற்றியாளர் விபரங்களை செப்.,12க்குள் உள்ளீடு செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனத்தில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளான எம்.சி.ஏ., - எம்.எஸ்சி.ஐ.டி., - எம்.பி.ஏ., மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்பை பயின்று, 2023 டிசம்பருக்கான செமஸ்டர் தேர்வுகளை எழுதியோருக்கு, இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதை, http://www.ideunom.ac.inஎன்ற இணையதளம் வாயிலாக அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை