உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறிநாய் கடித்ததில் தாய், மகள் படுகாயம்

வெறிநாய் கடித்ததில் தாய், மகள் படுகாயம்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாரத் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி ஜோதி, 35. இவரின் இரட்டை பெண் குழந்தைகளில் மூத்த மகளான தன்யாஸ்ரீ, 4, வீட்டின் அருகே நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறி பிடித்த தெருநாய், தன்யாஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதை பார்த்த அவரது தாய் ஜோதி, நாயிடம் இருந்து மகளை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவரையும் நாய் கடித்தது.நாயை விரட்டியடித்து காயமடைந்த ஜோதி, அவரது மகள் தன்யாஸ்ரீ ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஓசூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதனால், வீட்டின் அருகே விளையாடும் குழந்தைகள், சாலைகளில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடித்து வருகின்றன. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்