உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கோவிலில் நவாஸ்கனி தரிசனம்: விபூதியை அழித்ததாக வி.ஹெச்.பி., கண்டனம்

ராமேஸ்வரம் கோவிலில் நவாஸ்கனி தரிசனம்: விபூதியை அழித்ததாக வி.ஹெச்.பி., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தரிசனம் செய்தார். அவர் விபூதியை அழித்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 'சிட்டிங்' எம்.பி., நவாஸ்கனி மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று ராமேஸ்வரத்தில் பிரசாரத்தை துவக்கினார். அவருடன் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா, நிர்வாகிகள் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்தனர்.சுவாமி சன்னிதியில் குருக்கள் வழங்கிய தீர்த்தத்தை கையில் தேய்த்துக் கொண்டார். அமைச்சர், எம்.எல்.ஏ., தீர்த்தத்தை பருகி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.சன்னிதியை கடந்து சென்றபின், நவாஸ்கனி நெற்றியில் இருந்த விபூதியை அழித்துக் கொண்டார். இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஆ.சரவணன் கூறியதாவது:கொடி மரத்தை தாண்டி வரும் வேறு மதத்தினர் ஹிந்து சடங்குகளை கடைப்பிடிக்க வேண்டும். அவர் விபூதி, குங்குமத்தை நெற்றியில் இருந்து அழித்தது கடும் கண்டனத்திற்குரியது. கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.RAMACHANDRAN
மார் 28, 2024 06:52

வேற்று மதத்தினர் கோயில்களுக்கு வருவதை ஊக்கப்படுத்தும் விதத்தில் மத வெறியர்கள் கருத்து சொல்ல மாட்டார்கள்விபூதி பூசினால் தீர்த்தம் பருகினால் தான் பக்தி என்பது விதண்டா வாதம் தெய்வம் புறச் சின்னங்களை பார்ப்பது இல்லை மனது தூய்மையாக உள்ளதா என்றுதான் பார்க்கிறது கோயில்களை வைத்து வியாபாரம் செய்பபவர்கள் இதனை அறிய வாய்ப்பு இல்லை


D. Singaram
மார் 28, 2024 10:21

தீர்த்தத்தை கையில் தேய்த்தது சர்ச்ச்சை ஆகவில்லை அதே போல் அவர் திருநீரை வாங்காமல் இருந்திருந்தாலும் ஒன்றும் இல்லை வாங்கி நெற்றியில் வைத்து விட்டு பின் அழித்ததைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா?


Kasimani Baskaran
மார் 28, 2024 05:36

சனாதனத்தை அழிப்பேன் என்று சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போட நினைத்தால் சிந்தித்து முடிவெடுங்கள் இந்துக்களின் ஓட்டுக்களை வாங்க அவர்கள் எப்பேற்ப்பட்ட நாடகமும் போடத்தயார்


S ANBUSELVAN
மார் 28, 2024 05:34

பள்ளிக்கூடத்தில் டீச்சர் எனது பென்சிலை திருடிவிட்டான் என சின்னப்பிள்ளைகள் குற்றஞ்சாட்டுவது மாதிரி இருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத் சொல்வது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை