மேலும் செய்திகள்
திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
1 hour(s) ago | 1
சென்னை:தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், அங்குள்ள மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு மின் தடை, மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.இதற்கு தீர்வு காண, டெல்டா மாவட்டங்களில் அதிக மின்சாரத்தை கையாள கூடுதல் டிரான்ஸ்பார்மர் நிறுவ, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக, மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி, 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில், 160 எம்.வி.ஏ., எனப்படும், 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனில் கூடுதலாக ஒரு பவர் டிரான்ஸ்பார்மர் நிறுவும் பணி துவங்கிஉள்ளது.இதன் வாயிலாக, கடலங்குடி, மயிலாடுதுறை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கூடுதலாக, 108 மெகா வாட் மின்சாரம் வினியோகம் செய்ய முடியும். இது தவிர, கும்பகோணம், 230 கி.வோ., துணை மின் நிலையத்தில் கூடுதலாக, 80 மெகா வாட் மின்சாரம் கையாள, 100 எம்.வி.ஏ., திறனில் டிரான்ஸ்பார்மர் நிறுவப்படுகிறது. இதுகுறித்து, மின் வாரிய தலைமை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:கடலங்குடி துணை மின் நிலையத்தில், 100 எம்.வி.ஏ., திறனில் இரண்டு மற்றும் கும்பகோணம் துணை மின் நிலையத்தில், 100 எம்.வி.ஏ., திறனில், மூன்று பவர் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.இரண்டு இடங்களுக்கு உட்பட்ட பகுதியிலும் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கடலங்குடியில், 100 எம்.வி.ஏ., திறனுக்கு பதில், 160 எம்.வி.ஏ., திறனில், இரண்டு டிரான்ஸ்பார்மர்களும்; கும்பகோணத்தில் ஏற்கனவே உள்ள மூன்றுடன் சேர்த்து கூடுதலாக 100 எம்.வி.ஏ., திறனில் ஒரு டிரான்ஸ்பார்மரும் நிறுவப்படுகிறது.இதனால், சீராக மின்சாரம் வினியோகம் செய்யப்படும். இதேபோல், டெல்டாவில் மின் தேவை அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, கூடுதல் டிரான்ஸ்பார்மர் நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 1