உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்டனையை ரத்து செய்ய கோரி நிர்மலா தேவி அப்பீல்

தண்டனையை ரத்து செய்ய கோரி நிர்மலா தேவி அப்பீல்

சென்னை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி மதுரை .உயர் நீதிமன்ற கிளையில் அப்பீல் செய்துள்ளார்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக எழுந்த புகாரில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஏப்.30-ம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில் தன் மீதான தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பீல் செய்துள்ளார். மேலும் இடைக்கால ஜாமின் கோரியும் மனு செய்துள்ளார். இம்மனுக்கள் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
மே 07, 2024 22:03

காட்டிக்கொடுத்தால் உயிர் போய்விடுமே தூக்கில் தொங்கினார், அதிகாலை வாக்கிங் போனார் என்றல்லவா செய்திகள் வெளிவரும்


Senthoora
மே 07, 2024 21:21

உயிரே போனாலும் உண்மை குற்றவாளிகளை காட்டிக்கொடுக்கலாமே?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை