உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து பழனிசாமி 10 நாள் ஆலோசனை

லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து பழனிசாமி 10 நாள் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அனைத்து தொகுதிகளிலும் இக்கூட்டணி தோல்வியை தழுவியது. அ.தி.மு.க., இதுவரை இல்லாத அளவு தென் மாவட்டங்களில் சரிவை சந்தித்துள்ளது.தொடர் தோல்விகளைத் தடுக்க அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் குரல் எழுப்பி உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து லோக்சபா தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க, பழனிசாமி முடிவு செய்துள்ளார். சென்னையில் கட்சி அலுவலகத்தில் முதற்கட்டமாக 26 தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி மாலை 3:30 மணிக்கு காஞ்சிபுரம், 5:30 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மறுநாள் முதல் தினமும் காலையில் இரண்டு; மாலையில் ஒரு தொகுதி வீதம் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்க உள்ளன.இக்கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

KR
ஜூலை 06, 2024 13:24

EPS thalamai thaan karanam endru Sollum thairiyam erukkuma orurharukavathu


MADHAVAN
ஜூலை 06, 2024 10:27

எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் வந்து பதில் சொல்லுவாரா ? தலைமறைவு னு செய்தி வருது ?


Durai Kuppusami
ஜூலை 06, 2024 09:11

என்ன ஆலோசனை எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..ஏன் தோல்வி நீ இருக்கும் வரை தோல்விதான் வரும்...


Sundar R
ஜூலை 06, 2024 08:52

ஜெ மறைவுக்குப் பின் அதிமுக அஸ்தமனம் ஆரம்பம் ஆகிவிட்டது. பன்னீர் செல்வம் அவர்கள் தயவில் பொழுது சாயும் வரை பழனிசாமி முதலமைச்சராக தொடர்ந்தார். இப்போது பழனிசாமி செய்வது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.


R S BALA
ஜூலை 06, 2024 08:51

நீயெல்லாம் ஆராய்ச்சி செய்து என்ன பண்ண போற.. அம்மா இருக்கறவரை உன் பெயரே யாருக்கும் தெரியாது. கட்சிக்கு மூடுவிழா பண்ணியாச்சு இனி எழுந்திருப்பது மிக கடினம்.


vadivelu
ஜூலை 06, 2024 07:24

வி சி க , கொங்கு வேளாளர் கட்சி , இஸ்லாமிய கட்சி, காங்கிரஸ் கட்சி எல்லாம் புத்திசாலித்தனமாக கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்றத்திற்கு தங்களின் தலைவர்களை அனுப்பி அங்கே கத்தி கொண்டு இருக்கின்றனர். நீங்கள் உங்களை மட்டுமே நினைத்து தலையில் மண்ணை வாரி போட்டு கொண்டு விட்டீர்கள். இனியும் வரும் தேர்தல்களில் உங்களுக்கு இதே நிலைதான். சிறிய கட்சி போல சூட் கேஸ் வாங்கி காலம் தள்ள வேண்டியது தான். தி மு க விற்க்கு எதிரான வாக்குகளை ஒரே கூட்டணிக்காய்க ஐஐ ஹு அடைந்தாள் மட்டுமே அண்ணா தி மு க என்ற கட்சி இருக்கும்.


raja
ஜூலை 06, 2024 07:10

தமிழர்கள் திருட்டு திராவிட கொள்ளை கூட அடித்து விரட்ட அதிமுக பிஜேபி கூட்டணி தான் வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள் ...புரிந்துகொண்டால் ஈபிஎஸ் புத்திசாலி


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 07:06

உலகம் மறக்க வாய்ப்பில்லை. வழக்கு வாபஸ் முக்கியம்...


vijay,covai
ஜூலை 06, 2024 06:13

தொடர் தோல்விக்கு முதல் காரணம் EPS, பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும்,பிஜேபி உடன் கூட்டணி அமைத்து இருந்தால் 15 முதல் 20 சீட் கிடைத்திருக்கும்,உங்களுக்கு ஓட்டு போட்டு என்ன பயன் என்று மக்கள் திமுகவுக்கு போட்டு விட்டனர்


A Viswanathan
ஜூலை 06, 2024 09:42

எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் எந்த ஆட்சியை கீழ் இறக்க வேண்டும் நினைத்தார்களோ கவுரவம் பார்க்காமல் கூட்டணி வைத்து அதை செய்யுங்கள். இல்லை என்றால் சரித்திரத்தில் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ