உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டியில் பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: எஸ்.பி மன்னிப்பு கேட்ட பின் போராட்டம் வாபஸ்

ஊட்டியில் பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: எஸ்.பி மன்னிப்பு கேட்ட பின் போராட்டம் வாபஸ்

நீலகிரி: ஊட்டியில் பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, வெளியில் இருந்த தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், சில தொண்டர்கள் காயமுற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச் 25) பா.ஜ., தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் தொண்டர்களை நோக்கி தடியடி நடத்தினர். இதனால் பா.ஜ., தொண்டர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசாரின் தடியடியில் சில பா.ஜ., தொண்டர்கள் காயமுற்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாநில தலைவர் அண்ணாமலை, ''ஊட்டி எஸ்.பி சுந்தர வடிவேல் பணியிடை நீக்கம் செய்யும்வரை போராட்டம் தொடரும்'' எனக் கூறி எல்.முருகன் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.போராட்டத்தின்போது எஸ்.பி சுந்தரவடிவேல், தடியடி தொடர்பாக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்த அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று காயமுற்ற தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
மார் 25, 2024 21:20

விடியாத ஆட்சியின் முடிவு காலம் நெருங்கி விட்டது..... தோல்வி பயத்தில்... ஏவல்துறை மூலம் அடக்குமுறையை கையாள்கிறார்கள்.... இது அவர்களின் தோல்வி பயத்தையே காலை காட்டுகிறது.


Nagarajan D
மார் 25, 2024 19:58

shameless dmk goondaas wing is tamilnadu police department


krishnamurthy
மார் 25, 2024 18:19

arajaham thuvangi vittathu


சிந்தனை
மார் 25, 2024 17:15

இவர்கள் தமிழக காவல்துறையில்லை...திமுகவின் காவல்துறையினர்....


கனோஜ் ஆங்ரே
மார் 25, 2024 17:07

தொடக்கமே “அமர்கலம்”?


Palanisamy Sekar
மார் 25, 2024 16:52

ஏவிவிடப்பட்ட போலீசுக்கு இது சற்றும் பொருந்தாத செயல்எதிர்பாராத அளவுக்கு தொண்டர்கள் கூடியதை கண்டவர்கள் போலீசை ஏவிவிட்டு விரட்டியடிக்க பார்த்தார்கள் நல்லவேளை அண்ணாமலை அவர்கள் அங்கிருக்க இதனுடன் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது ஆளும் தரப்புக்கு இன்னும் பயம் அதிகரித்துவிட்டது என்பதையே இது காட்டுகின்றது எல் முருகனின் வெற்றி உறுதி ஆகிவிட்டது


R Kay
மார் 25, 2024 15:27

Scotland Yard Police


நரேந்திர பாரதி
மார் 25, 2024 15:17

பொம்பளைங்கள போயி அடிச்சிருக்கானுங்கபொட்டை திராவிடியா திருட்டு பசங்க


மேலும் செய்திகள்



புதிய வீடியோ