மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
22 minutes ago
சென்னை:புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வருவதை தடுப்பதில், தமிழக காவல் துறை தோல்வி அடைந்து விட்டதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி, மதகடிப்பட்டில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த, விக்கிரவாண்டியை சேர்ந்த ஏழு பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 66 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதையும், கடத்தி வரப்படுவதையும் தடுக்க, தமிழக காவல் துறை தவறிவிட்டது என்பதை, இந்நிகழ்வு காட்டுகிறது. கள்ளச்சாராயக் கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல் துறையும் முற்றிலுமாக தோல்வி அடைந்து விட்டன. இனியாவது புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
22 minutes ago