உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட்கா கடத்தலை தடுப்பது சிரமம்: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆதங்கம்

குட்கா கடத்தலை தடுப்பது சிரமம்: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆதங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “குட்கா போன்ற பொருட்களுக்கு, அண்டை மாநிலங்களில் தடையில்லாததால், தமிழகத்திற்கு கடத்தி வருவதை தடுக்க முடியவில்லை,” என உணவுப் பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் கூறினார்.ஆந்திரா மாநிலம் தடா பகுதியில் இருந்து, தமிழகத்திற்கு லாரிகள் வாயிலாக, 26ம் தேதி குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டன. கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில், 10,800 கிலோ பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று முன்தினம், 4,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:இந்தியாவில், ஒரு சில மாநிலங்களில் தான், பான் மசாலாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் பான் மசாலா பொருட்கள் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படுகின்றன. பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து பான் மசாலாக்களை எளிதாக கொள்முதல் செய்து, 4 அல்லது 5 மணி நேரத்திற்குள் சென்னைக்கு கொண்டு வந்து விடுகின்றனர். இவற்றை தடுப்பதில், பல்வேறு சிரமங்கள் உள்ளன. சாலையின் ஒருபுறம் பான் மசாலாவுக்கு தடை; மற்றொருபுறம் தடை இல்லை. இதை வைத்து, எளிதாக ரயில், லாரிகள் வாயிலாக, தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர். நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும், அவர்கள் மீண்டும் மீண்டும் கடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
ஜூலை 28, 2024 21:03

1970 களில் மதுவிலக்கு தோல்வியில் முடிந்து கள்ளுக்கடை, சாராயக்கடைகளை தொறந்து உட்ட மாதிரியே குட்கா, கஞ்சாவும் அனுமதிக்கப்படும். இல்லேன்னா இது மாதிரி கடத்தல் நடைபெறும்.


Godyes
ஜூலை 28, 2024 19:02

சட்டசபையில் குட்கா வாயில் வைத்து மெல்லுவதாக பத்திரிகை செய்தி


Mani . V
ஜூலை 28, 2024 05:39

குட்கா போன்ற பொருட்களுக்கு, அண்டை மாநிலங்களில் தடையில்லாததால், தமிழகத்திற்கு கடத்தி வருவதை தடுக்க முடியவில்லை. எல்லோரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தொலைய வேண்டியதுதானே?


jai suriyan
ஜூலை 28, 2024 09:22

கோடிக்கணக்கான விற்பனையாளர்களை நிறுத்துவது சாத்தியமில்லை ஆனால் அந்த சில உற்பத்தியாளர்களை நம்மால் தடுக்க முடியும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை