உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி தரத்தை சீரழிக்கும் தி.மு.க., ராமதாஸ் விமர்சனம்

கல்வி தரத்தை சீரழிக்கும் தி.மு.க., ராமதாஸ் விமர்சனம்

சென்னை:'தமிழகத்தில், 4500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததுதான் தி.மு.க., அரசின் சாதனை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், 2994 துவக்க, நடுநிலை பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால். அவர்களால் பாடம் நடத்த முடியவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில், அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால், தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், பிற ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித் தரத்தை சீரழித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை