உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாம்பரம் - ராமேஸ்வரம் உட்பட 10 புதிய ரயில்களுக்கு பரிந்துரை

தாம்பரம் - ராமேஸ்வரம் உட்பட 10 புதிய ரயில்களுக்கு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னை தாம்பரம் - -ராமேஸ்வரம் உட்பட 10 புதிய ரயில்களை இயக்க, ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து உள்ளது. தெற்கு ரயில்வேயில், பல ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை ரயில் பாதை மற்றும் அகலப்பாதை திட்டங்கள் முடிந்துள்ளன. எனவே, பயணியரின் தேவை குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழுவினர், பல மாதங்களாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்துள்ளனர். இதையடுத்து, தாம்பரம் - ராமேஸ்வரம், கோவை - தாம்பரம் உட்பட பல்வேறு வழித்தடங்களில், 10 புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. அதன் விபரம்: தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக தினமும் ராமேஸ்வரத்திற்கு ரயில்கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு வாராந்திர ரயில்தாம்பரம் -- பீஹார் மாநிலம் தனபூர் இடையே தினசரி விரைவு ரயில்தாம்பரம் -- மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே வாராந்திர விரைவு ரயில்திருநெல்வேலி - ஜோத்பூர்; கொச்சுவேலி -- கவுஹாத்தி வாராந்திர விரைவு ரயில்கொச்சுவேலி -- பெங்களூரு வாரம் மூன்று முறை ரயில் உட்பட 10 ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் திட்டப் பணிகள் முடிந்துள்ள வழித்தடங்கள் மற்றும் பயணியர் தேவை உள்ள வழித்தடங்களில் ஆய்வு செய்து, கூடுதல் ரயில்கள் இயக்க பரிந்துரைப்பது வழக்கமானது தான். இந்த அறிக்கையை ரயில்வே வாரியம் ஆய்வு செய்த பின், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பரிந்துரை என்பது ரயில்கள் இயக்குவது குறித்து ஆரம்ப கட்ட பணி தான்; இறுதி முடிவை ரயில்வே அறிவிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Akila Senthilkumar
ஏப் 09, 2024 13:36

சென்னை , எழும்பூர் -திருச்சிராப்பள்ளி மெயின் லைனில் வந்தே பாரத் ரயில் வேண்டும்


duruvasar
ஏப் 09, 2024 09:39

மும்பை, மற்றும் டில்லிக்கு தாம்பரதிலிருந்து நேரடி சேவை தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும்


தமிழ்வேள்
ஏப் 09, 2024 10:38

கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் தற்போது தாம்பரத்திலிருந்து புறப்படும் வகையில் மாற்றம் செயப்பட்டு இயங்கிக்கொண்டுள்ளது தவிர, சம்பர்க் கிராந்தி, திருக்குறள் வண்டிகள் தாம்பரம் வழியாகவே இயக்கப்படுகின்றன


venugopal s
ஏப் 09, 2024 09:33

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி அதைக் கொடுக்க விட மாட்டார் என்ற பழமொழி தென்னக ரயில்வே துறை விஷயத்தில் உண்மை தான்!


R Hariharan
ஏப் 09, 2024 09:15

செங்கோட்டை பெங்களூரு, செங்கோட்டை திருப்பதி, செங்கோட்டை ஹைதெராபாத், செங்கோட்டை கன்னியாகுமாரி, கோவை, திருச்செந்தூர், தூத்துக்குடி என்ன ஆச்சு மேலும் திருவந்திபுரம், மும்பை, கொல்கத்தா, நியூ டெல்லி, ஏன் பரிந்துரைக்கவில்லை செங்கோட்டை பெங்களூரு அவசியம் தேவை


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை