உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு எதிராக பதிவு;சாஸ்திரி மீது சரமாரி தாக்குதல்

தி.மு.க.,வுக்கு எதிராக பதிவு;சாஸ்திரி மீது சரமாரி தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்;தஞ்சாவூர் மாவட்டம், களஞ்சேரியில் உள்ள ஸ்ரீ வேத வித்யா குருகுலத்தை சாஸ்திரிகள் சீதாராமன் நடத்தி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r88cd12m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் வெளியிட்ட ஆடியோ:பிராமணர்களுக்கு எதிராக ராட்சத கூட்டமான திராவிட கழகம், தி.மு.க., போன்ற அசுர குணம் உள்ளவர்கள் அழிந்து, நமக்கு பாதுகாப்பான ஆட்சிக்கொடுக்க ஆள் கிடைத்து விட்டார். முன் எப்படி தபசு இருந்ததோ, தற்போது அது ஓட்டு. எல்லா பிராமணர்களும் தாமரை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு பேசியிருந்தார். இந்த ஆடியோ வலைதளங்களில் பரவியது.இதையடுத்து, நேற்று சீதாராமன் நடைபயிற்சி சென்ற போது, அவரை இருவர் தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து சீதாராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'ஆடியோ வெளியிட்டிருந்தேன். அதன் பிரதிபலனை உடனே காட்டுகின்றனர். நான் வாக்கிங் போன போது என்னை அடித்து காட்டுக்குள் இழுத்து சென்று, கெட்ட வார்த்தையில் திட்டி, ஒரு வாரம் வாயை பொத்திக்கொண்டு இரு என அடித்தனர். 'இந்த முறை நிச்சயமாக தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும். நேர்மையான ஆட்சி வர வேண்டும். அப்போது தான் சாதுக்களும், பொதுமக்களும் அமைதியாக வாழ முடியும்' என பேசி இருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சீதாராமனை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சீதாராமன் தான் தாக்கப்பட்டது தொடர்பாக ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, பா.ஜ., கூட்டணி தலைவர்கள், மயிலாடுதுறை பா.ம.க., வேட்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சீதாராமனை சந்தித்து பேசினர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, ஸ்டாலின் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

TR VISWANATHAN
ஏப் 17, 2024 15:11

Public shall identify the culprits and their masters and ignore voting for such rowdy elements in the coming elections


Venkatesan
ஏப் 17, 2024 11:48

ஜாதிவாரியாக மதம் வாரியாக தீம்கா என்ன என சொல்லலாம் பிராமணர்களை அவர்கள் வீடு பெண்களை மொத்த ஹிந்து பெண்களை, மற்றும் அவர்கள் வழிபடும் தெய்வ ரூபங்களை தீம்கா தீகா ராட்சதர்கள் என்ன வேணும்னாலும் சொல்லலாம் ஆனா அதை எதிர்த்து ஒருத்தன் குரல் கொடுத்தா போதும், பீதில பேதிதான் தீம்காவுக்கு ஏன் இந்த பயம்? இதையே ஒரு இஸ்லாமியர் சொல்லுதா இப்படி எல்லாம் மானத்த வாங்காதீங்கன்னு கெஞ்சிருப்பாங்க


Varadharajan
ஏப் 17, 2024 02:32

கருத்து சுதந்திரம் இல்லை அதுதான் இந்திய சுதந்திரதின் அடையாளம்


தஞ்சை மன்னர்
ஏப் 16, 2024 21:19

இது வீடியோ எல்லாம் நிறைய பார்த்தாச்சு வட நாட்டில் கொண்டு போயி போடவும் பீட வாயன் இதை நம்பி கலவரத்தில் ஈடுபடுவான் இன்னும் இரண்டு நாளில் இதே சாஸ்திரி மன்னிப்பு கேட்டு thirumpa ஒரு வீடியோ வெளியிடுவார்


KR india
ஏப் 16, 2024 20:01

ஐயோ பாவம் வருத்தமாக உள்ளது பொதுமக்கள் அவரவருக்கு பிடித்த கட்சியை ஆதரித்து பேசுவதும் , மாற்று கட்சியில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டுவதும் இயல்பான ஒன்று இந்தியாவில் பேச்சு, மற்றும் எழுத்து சுதந்திரம் உள்ளது இந்த பெரியவரை தாக்கியவர்களை, காவல்துறை கண்டுபிடித்து, தண்டனை வாங்கி கொடுத்து நீதியை நிலை நாட்டுமா ?


Mohan
ஏப் 16, 2024 16:34

இவருக்கு தகுந்த பாதுகாப்பை பி ஜே பி காரங்க லோக்கல் ஆளுக குடுங்க


RAMAKRISHNAN NATESAN
ஏப் 16, 2024 10:52

வேதபாடசாலை நடத்துபவர் ஏன் அரசியல் பேசவேண்டும் என்று ஒருவர் கேட்கிறார் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசை / முதல்வரை / அமைச்சர்களை விமர்சிக்கும் உரிமை உள்ளது


RAMAKRISHNAN NATESAN
ஏப் 16, 2024 08:17

இதற்காகத்தானே திமுகவை தேர்ந்தெடுத்தாய் தமிழா ???? இந்த லட்சணத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரித்துவிட்டதாக திமுக கூறுகிறது


saravanan
ஏப் 15, 2024 18:09

கருத்துரிமை, பேச்சுரிமை என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் தானா? பெரியவர் சீதாராமன் சாஸ்திரிகள் தனக்கு பிடித்த பாஜக இயக்கத்திற்கு வாக்கு போட சொல்லி கேட்டது ஒரு குற்றமா? இதெல்லாம் ஜனநாயக அத்துமீறலில் வராதா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஒருசாராருக்கு மட்டும் தானா பிரதமர் மோடி மீண்டும் அரியணை ஏறினால் அரசியலமைப்புசட்டத்தையே மாற்றிவிடுவார் என்றெல்லாம் சென்னவர்கள் இதை போன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்கிறார்களா


Narayanan
ஏப் 15, 2024 14:52

அடப்பாவிகளா ஒரு வேதம் படித்த ப்ராம்மணன் அவரை வேதனை பட செய்தி விட்டீர்களே அவரின் ஒரு சொட்டு கண்ணீர் உங்களின் வம்சத்தையே அழித்துவிடும் அந்த வேதமாதா உங்களை மன்னிக்கவே மாட்டாள் அழிவது திண்ணம் அடித்தவனை விட அடிக்க தூண்டியவன் குடும்பம் விரைவில் அழியும் இது சத்யம்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி