உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.50 கோடி மோசடி: தேவநாதன் வீட்டில் சோதனை

ரூ.50 கோடி மோசடி: தேவநாதன் வீட்டில் சோதனை

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தேவநாதன் வீடு உட்பட 12க்கு மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், 150 ஆண்டுகளாக, 'மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு' என்ற நிதி நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைவராக தேவநாதன் இருக்கிறார். நிதி நிறுவனத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.525 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதன் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். சென்னை பாண்டி பஜாரில் உள்ள தேவநாதன் வீடு, மயிலாப்பூரில் உள்ள அலுவலகம் உட்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். நிதி நிறுவன அலுவலகத்தில் ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டுடிஸ்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

r.thiyagarajan
ஆக 18, 2024 14:34

Strict rule must be implemented by the court n govt.to block all his property and savings and all the money to be return to the investors..further all chitfund must be closed by the govt rule..public hv to go with bank and post offices.


Ramesh Sargam
ஆக 18, 2024 12:48

தனியார் நிதி நிறுவனங்களில் மோசடி என்பது காலம் காலமாக தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. தெரிந்தும் மக்கள் ஒரு சில எதிர்பார்ப்புகளுடன் அங்கே பணம் வைய்ப்பு வைக்கிறார்கள். முடிவில் பல நிதி நிறுவனங்களில் மோசடி ஏட்பட்டு, மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தப்பணத்தை, தங்கம் போன்ற பொருட்களை இழக்கின்றனர். மக்களிடம் ஆசை வேண்டும். பேராசை கூடாது. பேராசை பேரழிவு என்பதை இப்பவாவது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை