உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்தாரி போல கதறுகிறார் இபிஎஸ்: தி.மு.க., - எம்.பி., - அ.ராஜா பதிலடி

காந்தாரி போல கதறுகிறார் இபிஎஸ்: தி.மு.க., - எம்.பி., - அ.ராஜா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், எம்.பி.,யுமான அ.ராஜா வெளியிட்ட அறிக்கை:கருணாநிதி நுாற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசு, 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. 'விழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஏன் வருகிறார்; ராகுலை ஏன் அழைக்கவில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கேட்டிருக்கிறார்.இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது மத்திய அரசு தான் என்பதால், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் பங்கேற்றதில், பழனிசாமிக்கு என்ன பிரச்னை.கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து ஏன் இருக்கிறது என, பழனிசாமி கேட்டிருக்கிறார்.இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும், அதில் ஆங்கிலமும், ஹிந்தியும் இருப்பது வழக்கம். அ.தி.மு.க.,வை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டபோது, அதில் ஹிந்தி எழுத்துக்கள் இருப்பது கூட பழனிசாமிக்கு தெரியவில்லை.கருணாநிதிக்கு வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான், 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.கருணாநிதியை மத்திய அரசே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவான அத்திக்கடவு திட்டத்தை, தி.மு.க., அரசு நிறைவேற்றி இருப்பதை பொறுக்காமல், 'காந்தாரி' போல பழனிசாமி கதறுகிறார். இவ்வாறு அ.ராஜா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

adalarasan
ஆக 20, 2024 21:55

சீர்திருத்தவாதி,,இந்துக்களுக்கு எதிராக பேசும் தங்களுக்கு திடீரென்று தங்களுக்கு காந்தாரி கத பாத்திரம் எங்கிருந்து????


sugumar s
ஆக 20, 2024 17:04

காந்தாரி போல கதறுகிறார் . மத நம்பிக்கை இல்லாத ராஜா ஏன் மஹாபாரதத்தை மேற்கோள் காட்டுகிறார். என்ன எழவுடா இது


Narayanan
ஆக 20, 2024 12:53

பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் . தயவு செய்து முகத்தை போடாதீர்கள்


Sampath Kumar
ஆக 19, 2024 11:06

கத்துவதற்கு நல்ல பொருத்தமான பெயர் காந்தாரி இது தமிழர்களின் வழக்கமான சொலவடை இதை பயன் அடுத்துவதால் ராமாயணம் மஹாபாரத்தை இழிவு படுத்தி விட்டு இப்போ எப்படி பேசலாம் என்பது ஆனந்த் போன்ற அரைவேக்காடுகளின் அற்பபுத்தியை தான் காட்டுகின்றது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 19, 2024 13:41

ஆனந்த் எழுதியதில் தவறில்லை .... சரியாகப்புரிந்து கொள்ள இருபத்தொண்ணாம் பக்கத்து அறிவாளிகளால் இயலாது .....


Raa
ஆக 19, 2024 10:34

ராமாயணம் & மஹாபாரதம் கட்டுக்கதை என்று சொல்லும் கும்பல் துக்கு, அதில் வரும் கதாபாத்திரம் மட்டும் எதுக்கு எடுத்து நம்பி உவகம் படுத்த முயல்கின்றனர்?


Anand
ஆக 19, 2024 10:29

//காந்தாரி போல// மஹாபாரதம், ராமாயணம் எல்லாம் கட்டுக்கதை என்று கடவுள் மறுப்பு கொள்கை என கூறி ஊரை ஏமாற்றி கொழுத்து திரியும் எச்சங்கள் இப்போது மட்டும் ஏன் இதை பேசுகிறது?


Mr Krish Tamilnadu
ஆக 19, 2024 10:01

இ.பி.எஸ்க்கு பதில் தந்து பதில் தந்தே சிக்கல் ஆகி விடுகிறது ராஜா அவர்களுக்கு. தேர்தல் நேரத்தில் அம்மா என பதிலடி தந்தார். சிக்கலாகி விட்டது. முதலில் கட்சிக்கும் காயினுக்கும் சம்பந்தமில்லை. கலைஞரின் வாழ்நாள் சேவைகளை பெருமை படுத்தும் விதத்தில் மத்திய அரசு தமிழக அரசிடம் பெருமை படுத்தி தந்துள்ளது. காயின் மாடல் இவர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. இந்தி எதிர்ப்பு, சுய தமிழ் சொற்கள் விரும்பியவர் தான் கலைஞர் அவர்கள். இதுவும் மறுக்க முடியாத உண்மை.


MP.K
ஆக 19, 2024 09:39

அரசியல் பார்வை, பிஜேபி திமுக நெருங்குகிறது என்ற பார்வையில் EPS பேசுகிறார். ராகுலை ஏன் அழைக்கவில்லை என்று பேசி கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கி அதன் மூலம் காங்கிரஸ் திமுக இடையே பிளவை உண்டாக்கலாம் என்ற பகல் கனவும் புரிகிறது


Swaminathan L
ஆக 19, 2024 09:37

திஜக பாமுக என்று அழைக்கலாமா இனிமேல்? கலைஞர் சமாதியில் அண்ணாமலையை சங்கிலியிட்டுக் கட்டி இழுத்து வந்தாற்போல் இருந்தது அவர் முகபாவம். கும்பிடு வைக்கையில் எவ்வளவு அசுவாரசியம் அவரிடம்? பாவம் அவர்.


vadivelu
ஆக 19, 2024 09:25

ராசாவுக்கு நல்ல மனம் இருக்கும் புது ஒன்றிய அரசு மத்திய அரசாகி விடுகிறது. காந்தாரி எதற்காக எப்போது கதறினார் என்று ஒல்லி irukkalaame.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி