உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறை மறுப்பு

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறை மறுப்பு

சென்னை: பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில், ஏப்ரல் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=85vtj3g5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி சென்ற நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் சதீஷ், பெருமாள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறினர். இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரிக்க மறுப்பு

இந்நிலையில், திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யுமாறு சுயேட்சை வேட்பாளர் ராகவன் தொடர்ந்த வழக்கு, இன்று (ஏப்ரல் 22) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‛‛தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது' எனக் கூறி விசாரணை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவகாசம் கோரி மனு

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு பதிலாக அவருடைய வழக்கறிஞர் தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

K.n. Dhasarathan
ஏப் 24, 2024 10:46

அமலாக்க துறையில் விசுவாசத்திற்கு அளவே இல்லை, அநேகமாக நயினார் நாகேந்திரனுக்கு தேசிய அவார்டு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது


spr
ஏப் 22, 2024 18:03

"‛தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது " - இது உண்மையானால், பணப்பரிமாற்றம் money trail இருந்தாழும் காவற்துறை முதற்குற்றப்பத்திரிக்கை பதிந்தால் மட்டுமே விசாரிக்க வேண்டுமென்று கூறி வாதாடியவர்கள்


spr
ஏப் 22, 2024 18:03

"‛தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது " - இது உண்மையானால், பணப்பரிமாற்றம் money trail இருந்தாழும் காவற்துறை முதற்குற்றப்பத்திரிக்கை பதிந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டுமென்று கூறி வாதாடியவர்கள் இப்போது இப்படிச் சொல்வது வியப்பாக இருக்கிறது


spr
ஏப் 22, 2024 18:03

"‛தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது " - இது உண்மையானால், பணப்பரிமாற்றம் money trail இருந்தாழும் காவற்துறை முதற்குற்றப்பத்திரிக்கை பதிந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டுமென்று கூறி வாதாடியவர்கள் இப்போது இப்படிச் சொல்வது வியப்பாக இருக்கிறது


spr
ஏப் 22, 2024 18:01

"‛தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது " - இது உண்மையானால், பணப்பரிமாற்றம் money trail இருந்தாழும்


spr
ஏப் 22, 2024 18:00

"‛தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது "


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 22, 2024 15:19

இதற்கு தான் சொல்கிறோம் இந்தியாவில் ஆட்சி மாற்றம் கட்டாய தேவை


Dharmavaan
ஏப் 22, 2024 18:44

திருட்டு திமுகவிடமிருந்து தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 22, 2024 15:17

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒற்றை வரி "பாஜ, வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யுமாறு சுயேட்சை வேட்பாளர் ராகவன் தொடர்ந்த வழக்கு விசாரணை" எவ்வளவோ கோடிகள் பிடிக்கிறார்கள், திரும்ப கொடுக்கிறார்கள் அல்லது வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கிரார்கள் மேற்கொண்டு எண்ண செய்வார்கள் என்று பொதுமக்களுக்கு எந்த தேர்தல் காலத்திலும் தெரிவதில்லை ஆனால் இங்கே நயினார் நாகேந்திரன் மீது மட்டும் ஒரு சுயேட்சை கேஸ் போடுகிறார் அதுவும் ரயில் பிடிபட்ட மூன்று பேர் நயினாரிடம் கொடுக்க பணத்தை எடுத்து செல்வதாக சொன்ன ஒரே காரணத்திற்காக இங்கு கண்டிப்பாக உள்குத்து வேலை நடக்கிறது என்று தெளிவாக தெரிகிறது


M Ramachandran
ஏப் 22, 2024 19:05

முதுகெலும்பில்லா கோழைகள் அடுத்து கெடுக்கும் கயவர்கள் மக்களை கொள்ளையாடிக்கும் கும்பல் தமிழ் நாட்டைய்ய குடிகாரகள ஆக்கி அதில் பணம் பண்ணும் கயவர்கள் தற்குறி கும்பல் போதை பழக்கதை பள்ளி மாணவர்களை அடிமையாக்கி அதில் பணம் பண்ணும் கயவர்கள் அதிகாரா துஷ்ப்ரயோகம் செய்யும் இவர்களை எப்படி பிடிப்பது


Dharmavaan
ஏப் 24, 2024 11:22

கோர்ட்டின் பாரபட்சம், திமுக அடிமை மோடி எதிர்ப்பு அதுவே காரணம்


Sridhar
ஏப் 22, 2024 15:02

எவ்வளவோ இடங்களில் பணம் பிடிப்பட்டபோது யாரும் அமலாக்கத்துறையை கூப்பிடவில்லை திருட்டு கும்பலுக்கு ஒருமுறையாவது ஒரேயொரு பாஜாகா ஆளை அமலாக்கத் துறையிடம் பிடித்துக்கொடுத்து பழிதீர்த்து ஆனந்தம் அடைய வேண்டுமென்ற ஆசை பாவம், நிறைவேறமாட்டேன்குது


Anantharaman Srinivasan
ஏப் 22, 2024 14:31

எல்லாம் மேலிடத்து instructions என் கையில் ஓன்றுமில்லை என்று சொல்லாமல் சொல்கிறது அமலாக்கத்துறை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை