| ADDED : ஜூன் 25, 2024 01:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சாமந்தமலையை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பெருமாள், 52. இவர், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:சொந்த ஊரான சாமந்தமலையில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப சொத்து, 7.65 ஏக்கர் நிலம், பாட்டி சென்னம்மாள் பெயரில் உள்ளது. எங்கள் தாத்தா, 1976ல், பாட்டி சென்னம்மாள், 1999 ஏப்., 24ல் இறந்து விட்டனர்.ஆனால், இறந்து போன எங்கள் பாட்டி சென்னம்மாள் பெயரில் இருந்த நிலங்கள், பாகப்பிரிவினை செய்யாமலேயே, என் சித்தப்பா மாணிக்கம், அவரது மகன் தமிழ்செல்வன் பெயரில் 2023 ஆக., 30ல் பத்திரப்பதிவு செய்துள்ளார். அதற்காக ஆள் மாறாட்டம் செய்து, என் பாட்டியின் கையெழுத்தை முறைகேடாக போட்டுள்ளனர்.இது குறித்து விளக்கம் கேட்டும் பதில் இல்லை. என் பாட்டி இறந்து பல ஆண்டுகளுக்கு பின், அவர் கையெழுத்தை போட்டு முறைகேடு நடந்துள்ளது. எனவே, என் பாட்டியை கண்டுபிடித்து கொடுங்கள். மேலும், என் பாட்டி பெயரை பயன்படுத்தி, போலியாக சொத்துக்களை பரிமாற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.