மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago
மதுரை : மதுரை கோட்டத்தில் ரயில்வே லெவல் கிராசிங் பகுதியில் குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.ரயில் பாதை செல்லும் நகர், கிராம பகுதியில் லெவல் கிராசிங் அமைக்கப்பட்டுள்ளது. இதை இயக்க ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். சில இடங்களில் கேட் மூடப்பட்டாலும் அதனை திறந்து வாகனங்கள் செல்கின்றன.ரயில்வே சார்பில் விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டாலும் ரயில் பாதையை கடக்க முயற்சி செய்கிறார்கள். அதிகாலை துாக்கத்தில் வரும் வாகன டிரைவர்கள் இரும்பு கேட்களில் மோதி விடுகின்றனர். ரயில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பயணத்தை தொடர முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.ரயில்வேக்கும் இழப்பு ஏற்படுகிறது.லெவல் கிராசிங் கேட்டை திறப்பது, உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ரயில்வே சட்டம்154,160 பிரிவின்படி 3 அல்லது 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
7 hour(s) ago | 1
7 hour(s) ago
7 hour(s) ago