உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை கப்பல் சேவை திடீர் ரத்து

இலங்கை கப்பல் சேவை திடீர் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்: இந்தியா- -- இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட பயணியர் கப்பல் சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த 16ம் தேதி, சிவகங்கை என்ற சிறிய கப்பல், நாகையில் இருந்து இலங்கை சென்றது; மறுநாள் நாகை திரும்பியது. நேற்று முன்தினம், ஒன்பது பேர் மட்டுமே இலங்கைக்கு பயணம் செய்தனர். பின், 27 பேருடன் நாகை திரும்பியது.இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு இலங்கை செல்ல வேண்டிய கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. அந்த கப்பல் நிறுவன இயக்குனர் நிரஞ்சன் கூறுகையில், ''முன்பதிவு இல்லாததால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. ஆக., 31ம் தேதி வரை, வாரத்தில், செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மட்டும் சேவை இருக்கும். பயணியர் வரவேற்பிற்கேற்ப செப்., முதல், நாள்தோறும் கப்பல் போக்குவரத்து இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
ஆக 20, 2024 09:52

டிமாண்ட் இல்லாம கப்பல் ஓட்டறேன் பேர்வழின்னு மக்கள் பணத்தை வீணாக்க ஒரு கும்பல் கெளம்பிட்டு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை