உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்; வழக்கில் ஐகோர்ட் நீதிபதி உத்தரவு!

பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்; வழக்கில் ஐகோர்ட் நீதிபதி உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில், பள்ளி தலைமையாசிரியை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி 'தற்போதைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என கோவை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.கோவையில் கடந்த 18ம் தேதி பா.ஜ., சார்பில், மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் வரை நடந்த ரோடு ஷோ'வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இந்த பேரணியின் ஒரு இடத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக வடவள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி கோவை சாய்பாபா வித்யாலயம் பள்ளி தலைமையாசிரியை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'தற்போதைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம். மனு மீது ஏப்.3ம் தேதிக்குள் போலீசார் பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.Ramakrishnan
மார் 29, 2024 22:23

தேர்தல்கமிஷன் விதிகளை வகுக்கிறது அதை மீறினால் நடவடிக்கை எடுக்கவேண்டும் கடும் நடவடிக்கை வேண்டாம் என்றால், தேர்தல் கமிஷனின் அதிகார வரம்பில் நீதித்துறை தலையிடுவது ஆகாதா?


தமிழ்வேள்
மார் 29, 2024 20:26

திருட்டு திமுக முந்திரி கும்பல் குழந்தைகளை வெயிலில் உலர்த்தி எடுத்த போது இந்த கோர்ட் கள் என்ன செய்துகொண்டு இருந்தன?


வல்லரசு
மார் 29, 2024 19:14

பிரதமர் என்பதால் நடவடிக்கை இல்லை இதுவே முதலமைச்சர் என்றால் உடனே நடவடிக்கை. கண்டிப்பாக கவர்னராக அல்லது mp பதவி உறுதி


N.Arumugam
மார் 29, 2024 18:47

தேர்தல் ரோடுஷோ வுக்கு வந்தார் விருந்தினராக வரவில்லை அவரை மூன்றாவது முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்க வசதியாக பாஜக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க வந்திருந்தார் அரசு திட்டங்களுக்காக நடந்த விழிப்புணர்வு ரோடுஷோ அல்ல அது


N.Arumugam
மார் 29, 2024 18:47

தேர்தல் ரோடுஷோ வுக்கு வந்தார் விருந்தினராக வரவில்லை அவரை மூன்றாவது முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்க வசதியாக பாஜக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க வந்திருந்தார் அரசு திட்டங்களுக்காக நடந்த விழிப்புணர்வு ரோடுஷோ அல்ல அது


Lion Drsekar
மார் 29, 2024 16:54

உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடாமல் இருக்கவேண்டும் என்பது உலக மக்களின் பிரார்த்தனை வந்தே மாதரம்


வைத்தி
மார் 29, 2024 17:58

இன்றைய இளைஞர் நாளய பிரதமர் ஆகலாம், ஆனால் இன்றய பிரதமரை வரவேற்க கூடாதா? மோடி ஒரு அதிதி தமிழ் நாட்டுக்கு " அதிதி தேவோ பவா என்றும் சொல்லக் கூடாதா? இது IPC குற்றம் இல்லையே பள்ளி சட்டம் போலீஸை கூப்பிடுமோ ? விநோதம்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி