உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக் கூட்டாளி இயக்குனர் அமீருக்கு சம்மன்

ஜாபர் சாதிக் கூட்டாளி இயக்குனர் அமீருக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட மூவருக்கு, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, மார்ச் 9ல், டில்லியில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.அவர் அளித்த வாக்குமூலத்தில், 'ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 45 முறை போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தேன்.அந்த பணத்தில், கயல் ஆனந்தி நடிப்பில், 'மங்கை என்ற படத்தை தயாரித்தேன். அமீர் இயக்கத்தில், 'இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை தயாரித்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.அப்போது, இயக்குனர் அமீருக்கும், தனக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விவரித்துள்ளார். இதனால், அமீர் எப்போது வேண்டுமென்றாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், போதை பொருள் கடத்தல் குறித்து ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோர் நாளை காலை 10:00 மணிக்கு, டில்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sck
ஏப் 01, 2024 15:01

சினிமா கூத்தாடிகளுக்கு குருவி வேலை பார்க்கிறவன் இந்த அமீர் பாய் என்று நினைக்கிறேன். வந்த பணத்தில் கொஞ்சம் ஏழைகளுக்கும், கொஞ்சம் ஹஜ்க்கும் செலவு செஞ்சிடுங்க, எல்லாம் சரி ஆயிடும்...


தமிழ்வேள்
ஏப் 01, 2024 14:13

தமிழக தேர்தல் நாளுக்கு அருகில் , அல்லது அதன் பிறகு , வோட்டு எண்ணிக்கைக்கு முன்பு இருக்கலாம் இன்டர்போல் கேஸ் என்பதால் , திருட்டு முட்டு கும்பலின் பருப்பு எங்கு போனாலும் வேகாது காங்கிரஸ் தன்னுடைய தனிப்பட்ட , சர்ச் தொடர்புகளை வைத்துகூட ஒன்றும் செய்ய இயலாது குற்றம் அந்த அளவுக்கு சீரியஸ் ஆன ஒன்று இவர்கள் சிறைக்கு போக பயந்தால் , இவன் தாத்தா எழுதிய வசனம் போல -" ஒரு துளி விஷம் , ஒரு முழம் கயிறு , ஒரு கத்தி , பாழும் கிணறு " என்று ஏதாவது ஒன்றை தெரிவு செய்யவேண்டியிருக்கும்


RAMAKRISHNAN NATESAN
ஏப் 01, 2024 14:05

திராவிடர்களாகிய இஸ்லாமியர் முன்னேறினால் ஆரியர் கூட்டம் பொறாமைப்படுவது ஏன் ????


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 01, 2024 08:22

மத சட்டங்களில் தவறு என்று குறிப்பிடாத செயல்கள் அனைத்தும்/எதுவும் மதச்சட்ட விரோதம் அல்ல என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், உங்களின் கூற்று ஏற்றுக் கொள்ள முடியாதது கேள்வி கேட்டால் மனிதனால் உருவாக்கப் பட்ட சட்டங்களை விட இறைவனால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் சட்டமே உயர்ந்தது, ஆகவே மதச்சட்டங்களுக்கு உட்பட்ட எதுவும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், விதிமீறல்கள் என எதுவாக இருந்தாலும் மதச்சட்ட விரோதமானது அல்ல என்றே பதில் வரும் எதிர்த்து கேள்வி கேட்டால் மதத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வன்முறைக்கு உள்ளக நேரிடும் என்பதே எதார்த்த நிலை


பேசும் தமிழன்
ஏப் 01, 2024 07:58

தயாரித்த படம்.... நடத்தும் ஹோட்டல்..... அனைத்தும் அந்த பணத்தில் வந்ததாக தான் இருக்கும்.....அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஏப் 01, 2024 07:45

மிக பெரிய தவறுகளை செய்பவர்களை மதத்தில் இருந்து விலக்கி விட வேண்டும். மத பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் துணிந்து தவறுகளை செய்வதால் மொத்த மதத்தை குற்றவாளிகளாக பார்க்க வேண்டியுள்ளது. இந்த கும்பலுக்கு மதத்தை சாராதவர்கள் என்று மதத்தவர்கள் அறிவிப்பார்களா? அடைக்கலம் கொடுப்பார்களா.?


ஆரூர் ரங்
ஏப் 01, 2024 07:36

அதே ஜாஃபர் தயாரிக்கும் மங்கை பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி க்கு எப்போ சம்மன்? தேர்தலுக்குப் பிறகா?


Jysenn
ஏப் 01, 2024 07:33

Kaluthai kettaal kutti suvaru Teeviravaathikalin sorka bhumi Kollywood


sankaran
ஏப் 01, 2024 07:22

போதை பொருள் கடத்தி சம்பாதித்த பணத்தில், இறைவன் மிக பெரியவன் என்ற படம் தயாரிப்பு சூப்பர்


S. Gopalakrishnan
ஏப் 01, 2024 06:59

இவரின் முதல் பேட்டியில் "வட்டி மற்றும் போதைக்கு எதிரான மதத்தை கடைப்பிடிப்பவன் நான்" என்று கூறினார் - ஏதோ மற்ற மதங்கள் அவற்றை ஊக்குவிப்பது போல ....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை