மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
16 hour(s) ago
செங்கோட்டையனின் பிம்பம் உடைந்து விட்டது சொல்கிறார் உதயகுமார்
16 hour(s) ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை 13ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது.ஓட்டு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவ படை, சிறப்பு காவல் படை, போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சுழற்சி முறையில் ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர், 8 சப் இன்ஸ்பெக்டர்கள்,18 போலீசார், 14 சிறப்பு காவல் படையினர், 8 மத்திய காவல் படையினர் மற்றும் போலீசார் என ஒரு நாளைக்கு 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தபால் ஓட்டு எண்ணிக்கைக்கு 2 மேஜைகள் போடப்பட்டு ஒரு சுற்று தபால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டு 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago