உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்?: கார்கேவுக்கு நட்டா கடிதம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்?: கார்கேவுக்கு நட்டா கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சர் நட்டா கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் நட்டா கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி அமைதி காக்கிறது. காங்., அமைதி காப்பது ஏன்?. ஏராளமான பட்டியல் இனத்தவர்கள் உயிரிழந்துள்ள போதும், காங்கிரஸ் மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சரை பதவி விலக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்?. முதல்வர் ஸ்டாலின் சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pma03vvp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அழுத்தம் கொடுங்கள்!

அமைச்சர் முத்துசாமியை நீக்குவதோடு, முதல்வர் ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட அழுத்தம் கொடுக்க வேண்டும். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் மீது பழி போடுவது வெந்த புண்ணில் உப்பை தடவுவதாக உள்ளது. ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.ஐ., விசாரணை

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல், பிரியங்கா நேரில் சந்திக்குமாறு மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பதற்கு பதிலாக தைரியமாக குரல் எழுப்ப முன் வர வேண்டும். ராகுல் மற்றும் பிரியங்கா குரல் எழுப்பாதது ஏன்?. கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணையை அனுமதிக்க திமுக அரசுக்கு வலியுறுத்தப்படும். இவ்வாறு கடிதத்தில் நட்டா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பாக்கியநாதன்
ஜூன் 24, 2024 22:03

முதல்வர் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? பாக்கிக்கெல்லாம் வாய் கிழியுமே.


D.Ambujavalli
ஜூன் 24, 2024 21:49

இதுபோல் எதிர்க்கட்சி ஆட்சியில் நடந்தால் குரல் எட்டு திக்கும் ஓங்கும். 2026இல் இன்னும் நாலு சீட் கேட்க வேண்டாமா ?


Mario
ஜூன் 24, 2024 17:01

மணிப்பூர் விவகாரத்தில் பிஜேபி மௌனம் காப்பது ஏன்


P. SRINIVASALU
ஜூன் 24, 2024 16:16

நீட்டு, மணிப்பூர், நெட், தேர்தல் முறைகேடு , இன்னும் பல. அதுக்கு பதில் சொல்லுங்க


அரசு
ஜூன் 24, 2024 15:21

நெட், நீட் தேர்வுகளில் ஏற்பட்ட ஊழல், குழப்பம், கோல்மால் ஆகியவை பற்றி பாரதீய ஜனதா கட்சி ஏன் இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லையே.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 17:04

உங்களைப்போன்ற புரிதல் அவ்வளவுதான் .... இது போன்ற பிரச்னைகள் வேறு ...... கள்ளச்சாராய பலிகள் வேறு ....... இறந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தவர் ........ ஒரு கட்சியின் அடிமையாக இருந்துவிட்டாலும் கூட பொது அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் ....


Anand
ஜூன் 24, 2024 14:37

கூட்டுக்களவாணிகள்.


TCT
ஜூன் 24, 2024 14:25

Super. If any this type of situation happened during non DMK government then all DMK leaders and their followers do summersault to blame ruling party.


மேலும் செய்திகள்