| ADDED : மார் 30, 2024 02:35 PM
சென்னை: 'தேர்தல் நேரத்தில் ரூ.50 ஆயிரம் வரை மட்டும் எடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால், இது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது' என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.மேலும், அவர் கூறியதாவது: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு பெறுகிறது. 3 மணிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றார்.50,000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம், பரிசுப் பொருட்களை, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் ஆவணங்களை காண்பித்து, பொருட்களை திரும்பப் பெற காலதாமதம் ஏற்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.