உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., கூட்டணியில் அமமுக.,வுக்கு 2 தொகுதிகள்

பா.ஜ., கூட்டணியில் அமமுக.,வுக்கு 2 தொகுதிகள்

சென்னை : பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் கையெழுத்து போட்டனர்.பிறகு நிருபர்களிடம் பேசிய தினகரன், நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது பா.ஜ., அறிவிக்கும். குக்கர் சின்னத்தில் போட்டியிட விண்ணப்பித்து உள்ளோம். தமிழகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் திராவிடர்கள் தான். பா.ஜ., எதிர்ப்பதாகக் கூறுவது திமுக மற்றும் பழனிசாமியைத் தான். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ