உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்; தமிழக தேவைக்காக பேசுவேன்: அண்ணாமலை

மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்; தமிழக தேவைக்காக பேசுவேன்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை; மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றிப்பெற்று தமிழகத்துக்கான தேவைகள் குறித்து பார்லிமென்டில் பேசுவேன்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.கோவையில் இந்தியன் தொழில் முனைவோர் கூட்டத்தில் 'கோயம்புத்தூரின் தேவைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுகளை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த பிரதமர் மோடி உறுதிப்பூண்டுள்ளார். நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை; மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றிப்பெற்று கோவை தொகுதி எம்.பி.,யாக மட்டும் பார்லிமென்ட் செல்லப்போவதில்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான தேவைகள் குறித்தும் பார்லிமென்டில் பேசுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலை மீது வழக்கு

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்த நிலையில், நேற்று இரவு 10.30மணிக்கு மேல் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபோது திமுக.,வினருக்கும், பா.ஜ.,வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் திமுக.,வினர் 7 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் தேர்தல் விதிமீறி பிரசாரம் மேற்கொண்டதாக அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rajathi Rajan
ஏப் 12, 2024 20:23

ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழி குஞ்சு வரும்,,, இது டான் இந்த ஓசி சோறு சொல்லும் பொய் புளுகு முட்டைகள்,, இது மட்டும் ல்லம ரௌடிகளைம் குண்டர்களையும் ஏவி விட்டு அப்பாவி திமுக தொண்டர்கள் ஏழு பேரை அடித்து தொவைத்து விட்டார்கள், கேள்வி கேட்ட நிருபர்களையும் கேள்வி கேட்காத நமது நிருபரை தவிர அனைவர்கிட்டையும் வாக்குவாதம் வேற , இது எல்லாம் வந்த நமது நாடு விளங்கிடும் சாமீ


Bala
ஏப் 13, 2024 00:00

ரௌடி கட்சிக்கிட்டேயே ரௌடியிசத்தை ஒரு சாம்பிளுக்கு பாஜகவினர் காட்டியுள்ளனர் இனிமேலாவது திமுகவினர் திருந்துவார்களா? ரௌடியிசத்தை கைவிடுவார்களா? எம்ஜியார் தந்த அந்த தீய சக்தி என்ற பட்டத்தை திமுகவினர் என்றுதான் துறப்பார்களோ?


T.sthivinayagam
ஏப் 12, 2024 17:00

மத்தியில் மாற்றத்தையே மக்கள் விரும்புகின்றனர் இந்த முறை அடுத்தவர்களுக்கு வாய்பு கொடுத்து பார்க்க மக்கள் விரும்புகின்றனர்


Bala
ஏப் 12, 2024 19:47

வாய்ப்பில்லை ராஜா


vijai
ஏப் 12, 2024 22:40

யாருக்கு திருட்டு கூட்டத்துக்கா


T.sthivinayagam
ஏப் 12, 2024 16:56

கடந்த பத்து வருடம் மறந்தது ஏன் கோவையின் ஜிஸ்டி குஜராத்தில் கொட்டப்படுவது ஏன் என்று மக்கள் கேட்கின்றனர்


Bala
ஏப் 12, 2024 19:46

கடந்த பத்து வருடம் தமிழகத்தின் MP க்கள் அனைவரும் இந்தி கூட்டணி அதாவது திமுக கூட்டணி நபர்கள் அவர்களிடம் உங்கள் கேள்வியை பிரச்சாரத்திற்கு வரும்போது கேளுங்கள்


P. SRINIVASALU
ஏப் 12, 2024 16:28

யாருடைய மாற்றத்துக்கு? உங்களுக்க? மக்களுக்கு ஒன்னும் வரப்போறதில்லை கம்பிக்கற்ற கதையெல்லாம் சொல்லறாரு அண்ணாமலை


Prabaharan
ஏப் 12, 2024 15:57

நீங்களே சொல்லிட்டிங்க மாற்றம் வேண்டும் என்று - மத்தியில்


கனோஜ் ஆங்ரே
ஏப் 12, 2024 15:30

அண்ணாத்தே மாற்றம்னா? கடந்த பத்து வருஷமா, இந்தியா முழுமைக்கு மாற்றினீங்களே அது மாதிரியா? நீங்க நிற்கும் இந்தியாவின் மான்செஸ்டர் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களை ஜிஎஸ்டிங்ற பேர்ல மொத்தமா முடிச்சிட்டீங்களே அது மாதிரியா?


Indian
ஏப் 12, 2024 13:57

சரி நம்பிட்டோம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை