உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 200 நாட்களில் 595 கொலைகள்: பட்டியல் போடுகிறார் இபிஎஸ்

200 நாட்களில் 595 கொலைகள்: பட்டியல் போடுகிறார் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக ஆட்சியில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துவரும் திமுக அரசுக்கு கண்டனம். முதல்வர் ஸ்டாலின், தன்னை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார். திமுக ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாக கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதும் கண்கூடாக தெரிகிறது.

595 கொலைகள்

இந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரியில் 80 கொலைகள், பிப்ரவரியில் 64 கொலைகளும், மார்ச்சில் 53 கொலைகளும், ஏப்ரலில் 76 கொலைகளும், மே மாதத்தில் 130 கொலைகளும், ஜூனில் 104 கொலைகளும், ஜூலை 17 வரை 88 கொலைகளும் என 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து போலீஸை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்தினால், 'அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்' என்பதை நினைவூட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 19, 2024 17:38

உங்க திருட்டு திராவிட கூட்டத்தை ஒட்டுமொத்தமாக கட்டம் கட்டிவிட்டால் தமிழ்நாடு உருப்பட்டுவிடும் . என்ன செய்வது தமிழனுக்கு இன்னும் புத்தி வரமாட்டேங்குது. உங்க இருவர் ஆட்சியிலும் தமிழ்நாடு விளங்காமல் போய்விட்டது. ஆனால், நீங்க அவர்களை குற்றம் சொல்வதும் அவர்கள் உங்களை குற்றம் சொல்வதும் அடடா, அருமையான விளையாட்டு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2024 16:41

தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் இதுவே திராவிட மாடல்.


Durai Kuppusami
ஜூலை 19, 2024 15:52

மூடிகினு ராஜினாமா பன்னீட்டு போ...தொண்டனுங்கள தொல்லபண்ணாத


kulandai kannan
ஜூலை 19, 2024 15:09

அந்த மலர்க்கொடி அக்கா??!!


Kadaparai Mani
ஜூலை 19, 2024 16:00

அதிமுக உடனே அவரை கட்சி இல் இருந்து நீக்கியது .ஆனால் கைதானவர்களை திமுகவும் பாஜகவும் கட்சி இல் இருந்து நீக்க வில்லையே .


Jai
ஜூலை 19, 2024 13:58

தமிழ்நாட்டில் கொலைகள் தொடர்பாக அவசர நிலை பிரகடனப்படுத்த வேண்டும் அல்லது கொலையை தடுக்க லாக்டவுன் போட வேண்டும். நிலைமை மிக மோசமாக ஆகிவிட்டது.


Tamil Inban
ஜூலை 19, 2024 12:57

மிகசிறந்த ஒரு மகளிரணி வக்கீல கட்சிலேருந்து நீக்கிட்டியே


மோகனசுந்தரம்
ஜூலை 19, 2024 12:01

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தவர்கள் மீது நீ எந்த ஆணியை புடுங்கினாய். நீ எல்லாம் பேச வந்து விட்டாய்.


vadivelu
ஜூலை 19, 2024 15:26

ஒரு தனி மனிதன் அக்கறை இன்மையால் தோட்டத்தில் தோண்டிய பள்ளத்தில் விழுந்த குழந்தைக்காக , ஓட்டுக்காக, வை பணத்தை வாரி இட்டவர் தானே நீங்கள்.


திருட்டு திராவிடன்
ஜூலை 19, 2024 11:59

இந்த ஆள் எதை சொன்னாலும் மிகவும் கடுப்பாக இருக்கிறது ஏன் என்று தெரியவில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை