உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரூ.8.53 கோடி கடன் மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

 ரூ.8.53 கோடி கடன் மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

போலி ஆவணம் வாயிலாக, 8.53 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர், ஜவுளி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். சுந்தரமும் இவரின் கூட்டாளிகளான, ரமேஷ் மற்றும் நடராஜன் ஆகியோரும் போலி ஆவணங்கள் வாயிலாக, 1999 - 2001ம் ஆண்டில், ஸ்டேட் வங்கியில், 8.53 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, 2007ல், ஸ்டேட் வங்கியின் சார்பில் சென்னை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு விசாரணை, கோவை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ரமேஷ் என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையில் இருந்தபோதே, சுந்தரம் மற்றும் நடராஜன் ஆகியோர் இறந்துவிட்டதால் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி