உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரிக்குள் காலியாக இருக்கும் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது: இளைஞர்களின் நேர்மையை மனதில் வைத்து திட்டங்களை தீட்டுவதே இந்த திராவிட மாடல் அரசு. வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு.

பணி நியமனம்

கடந்த 3 ஆண்டுகளில் 65,483 இளைஞர்களுக்கு அரசுப்பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மட்டுமல்லாமல், பெருந்தொழில், சிறு, குறு நிறுவனங்கள் மூலமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் குறித்த புள்ளி விவரங்கள் மத்திய அரசின் மூலம் பெறப்பட்டன. இந்த தரவுகளின்படி 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

காலி பணியிடங்கள்

வரும் 2026 ஜனவரிக்குள் (18 மாதங்களில்) பல்வேறு அரசு பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலமாக 17,595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 பணியிடங்களும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் நிரப்பப்படும். அதாவது 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும். இது தவிர மற்ற துறைகளில் காலியாக உள்ள 30,219 பணியிடங்களும் நிரப்பப்படும். மொத்தத்தில் 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு சட்டசபையில் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

M chockalingam
ஜூன் 25, 2024 21:57

75 ஆயிரம்...சுத்தமான பொய்...


kumarkv
ஜூன் 25, 2024 21:41

எல்லாவற்றிலும் கழக கழிசாடைகள்


Nandakumar Naidu.
ஜூன் 25, 2024 21:08

தேச விரோத,சமூக விரோத மற்றும் ஹிந்து விரோத கும்பல்கள் தான் பணியில் அமர்த்த படுவார்கள் இந்த தாலிபான் ஆட்சியில்.


DMK
ஜூன் 25, 2024 20:02

டிஸ்மிஸ் பண்ணி கிழிச்சிருவீங்க. தேர்தல் வந்தால், திரும்பவும் திமுக தான் ஜெயிக்கும்


Maheesh
ஜூன் 25, 2024 17:06

தமிழ்நாடு முழுவதும் திம்காவின் ஐடியாலஜி அடிமையாக 1 லட்சம் பேர் தேவை என்று விளம்பரம் கொடுக்கலாம்.


V RAMASWAMY
ஜூன் 25, 2024 15:44

கொள்ளையோ கொள்ளை. திட்டங்கள், அதற்கான அறிவிப்புகள் பலவிதம், ஆனால் நோக்கம் ஒன்றே.


ராமகிருஷ்ணன்
ஜூன் 25, 2024 13:39

டிஸ்மிஸ் ஆகப்போறது தெரிந்து விட்டது. அதற்குள் முடிந்த அளவு சுருட்டி விடத்தான் இந்த அறிவிப்பு. வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூன் 25, 2024 13:37

2000 கோடி டார்கெட்


Lion Drsekar
ஜூன் 25, 2024 13:22

முன்பெல்லாம், ஒரு காவலர் தனது தொப்பி மற்றும் குச்சியை ஒரு நாற்காலியில் வைத்துவிட்டு சென்றாலும் அந்த இடத்தில தவறு செய்ய பயப்படுவார்கள் என்று முன்னாள் டி ஜி பி திரு நடராஜ் அவர்கள் கூறுவார் ஆனால் இன்றைய நிலையில் ?? கணினி வந்துவிட்டது, மக்கள் தொகை எவ்வளவு ஏறுமுகமாக இருந்தாலும் பதவியை நிரப்பவேண்டும் என்பற்காக நிரப்புவதற்கு பதிலாக தேவையான இடங்களில் நிரப்பினால் போதும். இதே தனியார் நிறுவனங்களாக இருந்தால் ஆறாயிரம் பணியிடங்கள் மட்டுமே வைத்துக்கொண்டு சீரும் சிறப்புமாக செய்வார்கள் . இது ஒரு சேவை, தயாரிப்பு மற்றும் வியாபாரம் இல்லை ஆகவே மக்கள் வரிப்பணம் என்பதால் தேவையான பதவிகளை மட்டும் நிரப்பி மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு செலவு செய்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்


M Ramachandran
ஜூன் 25, 2024 12:36

பணியிடம் நிரப்புவது இருக்கட்டும் நகரின் பல இடங்களில் முக்கிய சாலை கலீல் சாக்கடை / குடிநீர் குழாய் புதைக்கும் புது காண்ராக்ட்கள் என்ற பெயரில் குழி தோண்டி இரு சக்கர வாகணமெ போக முடியாமால் அதுவும் காலைய்ய மாலை வேளையில் அலுவலகம் செல்வோரார்களும் பள்ளிக்கு பிள்ளையா களை அழைத்து செல்லும் பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது. அது மட்டுமா? ஆ தீ மு க்கா ஆட்சியின் போது போடப்பட்ட பல சாலையய் கடக்க முதியோர்களும் கர்ப்பிணி பெண்களும் உபாயயோகிக்க நகரும் படிக்கட்டுகள் கிட்ட தட்ட ஒரு வருடமாக எல்லாம் பழுதடைந்து உபயோகிக்க முடியாமல் இருக்கின்றன. அதை முதலில் உங்கள் கட்சி கௌன்சிலர்களை கவனிக்க சொல்லுங்கள்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி