உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவில் நீதிபதிகள் பதவிக்கான தற்காலிக பட்டியல் ரத்து

சிவில் நீதிபதிகள் பதவிக்கான தற்காலிக பட்டியல் ரத்து

சென்னை:காலியாக உள்ள, 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான, தற்காலிக தேர்வு பட்டியலை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை, இரண்டு வாரங்களில் அரசு பணியாளர்கள் தேர்வாணையம்வெளியிடவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள, 245 சிவில் நீதிபதி பதவிகளை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த மாதம் 16ம் தேதி, தற்காலிக தேர்வு பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.இந்த தேர்வு பட்டியலை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'அதிக மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்துள்ளனர். இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது' என, கூறப்பட்டது.மனுக்களை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், தாட்சாயினி ரெட்டி, வழக்கறிஞர்கள் எஸ்.நெடுஞ்செழியன், பாலன் ஹரிதாஸ் ஆகியோர் ஆஜராகினர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டதால், நியமன உரிமை வந்து விடாது. எனவே, கடந்த மாதம் 16 ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை உடனடியாக ரத்து செய்ய, தேர்வாணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது.மெரிட் பட்டியலில் முன்னணியில் வந்தவர்களை, பொதுப்பிரிவில் சேர்த்தும், பின், பின்னடைவு காலியிடங்கள் மற்றும் தற்போதைய காலியிடங்களுக்கு இடஒதுக்கீட்டை பின்பற்றி சேர்த்தும், திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை தயாரிக்க வேண்டும்; அதை இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ