உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனைகளுக்கு ரூ.70 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

மருத்துவமனைகளுக்கு ரூ.70 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

சென்னை: சிவகாசி, கிருஷ்ணகிரி, கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், 70.55 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: சிவகாசி அரசு மருத்துவமனையில், 28.80 கோடி ரூபாயில், தரைதளத்துடன் கூடிய ஆறு மாடி கட்டடம்; 3.75 கோடி ரூபாயில் மருத்துவ உபகரணங்கள் என, 32.55 கோடி ரூபாயில், அவசர சேவைகள், சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன. இவற்றால், தீக்காயங் கள், சுவாச பிரச்னைகள், மகப்பேறு மற்றும் அவசர கால சேவைகள் மேம்படுத்தப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில், தேசிய நலவாழ்வு குழும நிதி உதவியுடன், தரைதளத்துடன் கூடிய, இரண்டு மாடி கட்டடம், 20 கோடி ரூபாயில் கட்டப்படும் கடலுார் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 18 கோடி ரூபாயில், 50 படுக்கை கள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட உள்ளது. இக்கூடுதல் கட்டடங்கள் வாயிலாக, மருத்துவமனைகளின் சிகிச்சைகள் மேம்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி