உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ: திடீர் ரத்து

நாளை காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ: திடீர் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: நாளை (ஏப்.,12) காரைக்குடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த நிலையில், தற்போது திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மதுரை வரும் அமித்ஷா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும், பின்னர் மாலை 6:10 மணியளவில் மதுரையிலும் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை காரைக்குடியில் நடைபெறும் 'ரோடு ஷோ' ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. காரைக்குடி ரோடு ஷோ ரத்து போல அமித்ஷாவின் மதுரை ரோடு ஷோ திட்டமிட்டபடி நடக்குமா அல்லது ரத்தாகுமா என்பதும் தெரியவில்லை. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை அமித்ஷா தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது 3வது முறையாக ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Balaji
ஏப் 11, 2024 20:22

We need real change from this corrupt Dravidian partiesPlease go to Utter pradesh and Gujarat and see the developments I too was beleiving these parties until and realised they are telling utter lies after my visits to these states in the last years


Balaji
ஏப் 11, 2024 20:17

தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக ஒரு மாறுதல் தேவை இந்த திராவிட கட்சிகளிடம் இருந்து


Veeraa
ஏப் 11, 2024 19:51

Amit Shah may have better job other than visiting TN which is spoiled by DMK/DK thugs. BJP alliance will get 4-8 seats in TN even without support of DMK/ADMK for sure.


அப்புசாமி
ஏப் 11, 2024 19:47

மூலவருக்கே கும்பல் இல்லாம காத்து வாங்குதாம்... இதிலே


Easwar Kamal
ஏப் 11, 2024 17:00

எப்படியும் தமிழக மக்கள் ஆப்பு வைக்க போரானுவ மோடிக்கு தெரியலை ஆனால் ஷாவுக்கு நன்றாவே தெரிஞ்சு இருக்கு அதுதான் பின் வாங்குகிற?


Karthikeyan
ஏப் 11, 2024 15:45

முதலில் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் போன்றோர் மணிப்பூரில் ரோட்ஷோ நடத்திய பிறகு தமிழ்நாட்டிற்கு வரலாம்


சக்திதாசன்
ஏப் 11, 2024 19:34

சந்தேஸ்காலிக்கு இந்தி கூட்டணி தலைவர்கள் செல்வார்களா?


R MANIVANNAN
ஏப் 11, 2024 13:23

நிலவரம் புரிஞ்சிருக்கும்


Lion Drsekar
ஏப் 11, 2024 13:22

சுதந்திரம் அடைந்தவுடன் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வென்று ? அன்று இன்றய காலத்தில் இருந்தது போல் மீடியா எதுவுமே இல்லை ஆகவே தெருக்கூட்டம், மேடைப்பேச்சு , எல்லாம் அவசியமாக இருந்தது அவர்களுக்கு ஆதனையாக இருந்தது ஆனால் அவைகள் அனைத்துமே மக்களுக்கு சோதனையாக மற்றும் வேதனையாக இருந்தது பயன் முழுமையாக அடைந்தவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமே, அப்பாவி மக்கள் வெளியுலகம் இன்றும் தெரியவில்லை, புரிந்து கொள்ளவும் இல்லை ஆனால் இன்றோ மீடியாக்கள் அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டத ஆகவே மேடைப்பேச்சு, ரோடு ஷோ , கடும் வெய்யலில் பொதுமக்களை திரட்டி கூட்டம் போடுதல் இவைகள் அவசியமா? உண்மையிலேயே சாதனை எய்திருந்தால் பயன் பெற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து வாக்களிக்கப் போகிறார்கள் இங்குதான் எல்லாமே தலைகீழாக இருக்கிறதே வருமான வரி கட்டுபவர்களால்தான் இன்று நாட்டின் பொருளாதாரமே வளர்ச்சி ஏறுகிறது, ஆனால் ஏழை மற்றும் பாமர மக்களிடம் இந்த அரசியல் கட்சிகள் கூறுவது, செய்வது, நம்ப வைப்பது தாமே இவர்கள் வீட்டு சொத்தில் இருந்து தானம் கொடுப்பது போல் செய்கிறார்கள், மாறாக வருமான வரி கட்டுபவர்கள் பணத்தில் இருந்து கொடுக்கிறோம் என்று கூறினால் வருமான வரி கட்டுபவர்களுக்கும் ஒரு மதிப்பு இருக்கும் மாறாக உண்மையான தொழில் அதிபர்களை இந்த அரசியல் கட்சிகள் சமூக விரோதிகளாக மக்களுக்கு காட்டுகிறார்கள் இதுதான் ஜனநாயகத்தில் இன்று தவறாக செயல்படுகிறது அதே போன்று தன்னைப்போலவே எந்த ஒரு தொழிலும் செய்யாமல், படிக்காமல் வீட்டில் இருந்தாலே எல்லாமே இலவசம் என்று கொடுப்பதால் எல்லோருமே தங்கள் குடும்ப வளர்ச்சிக்கு பாடுபடும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள் மொத்தத்தில் செய்வதை நேரடியாக செய்யவேண்டும் அப்போதுதான் யார் செய்கிறார்கள் என்று தெரியம், புரியும் இல்லை என்றால் என்னதான் ரோடுஷோ நடத்தினாலும் தவறானவர்கள் கைகளில் இருக்கும் ஊடகங்கள் மற்றும் மீடியா மட்டுமே அவர்களை முன்னிறுத்தி வெல்வார்கள், வந்தே மாதரம்


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 11, 2024 13:44

பாவம்


Mahendran Puru
ஏப் 11, 2024 12:48

ரோடு ஷோ முதலில் அருணாசலப் பிரதேச - சீன எல்லையில் நடக்கட்டும் அப்புறம் காரைக்குடிக்கு வரலாம்


Vivekanandan Mahalingam
ஏப் 11, 2024 15:34

காஷ்மீரிலும் நடத்தி காட்டுவார் மோடி


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை