உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலில் ஒரு கலக்கல் சுற்றுலா குருசடை தீவுக்கு படகு சவாரி

கடலில் ஒரு கலக்கல் சுற்றுலா குருசடை தீவுக்கு படகு சவாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடா கடலில் உள்ள குருசடை தீவுக்கு வனத்துறையின் படகில் ஜாலியாக இன்பச் சுற்றுலா செல்ல பயணிகள் குவிகின்றனர்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் முதல் துாத்துக்குடி வரை மன்னார் வளைகுடா கடலில் 560 சதுர கி.மீ., பரப்பில் 21 தீவுகள் உள்ளன. இத்தீவுகளை சுற்றிலும் டால்பின்கள், கடல் பசுக்கள், கடல் ஆமைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட 460 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.இந்த தீவுகளைச் சுற்றி வளரும் பவளப்பாறைகள் தீவுகளுக்கு மட்டுமின்றி ராமேஸ்வரம் தீவுக்கே பாதுகாப்பு அரணாக உள்ளது. 1980 முதல் இத்தீவுகளை தேசிய கடல் பூங்காவாக மத்திய அரசு அறிவித்த பின் 21 தீவுகளிலும் மீனவர்களோ, வெளி நபர்களோ தங்கி மீன்பிடிக்க வனத்துறை தடை விதித்தது.தீவுகளைப் பாதுகாக்க மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. மண்டபம், கீழக்கரை, துாத்துக்குடி வனத்துறையினர் ஒரு சில தீவில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், படகு மூலமும் கண்காணித்து வருகின்றனர். இதனால் அரிய உயிரினங்களும், தீவின் இயற்கை சூழலும் பாதுகாப்பாக உள்ளது.

குருசடை தீவு சுற்றுலா:

மன்னார் வளைகுடா கடலில் 20வது தீவான குருசடை தீவு கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாக விளங்கியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உயிரியல் ஆய்வுக் கூடம் இருந்தது. இதனால் வனத்துறை அனுமதியுடன் உயிரியல் ஆராய்ச்சியில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின் சில காரணங்களுக்காக உயிரியல் பூங்கா ஆய்வுக்கூடம் அகற்றப்பட்டு மாணவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.தற்போது குருசடை தீவுக்கு படகில் சுற்றுலா செல்ல வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.2022 மார்ச்சில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து சுற்றுலாப் படகு சவாரியை வனத்துறை துவக்கியது. ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் பாம்பன் குந்துகாலில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கண்டு ரசித்து அங்கிருந்து 1.5 கி.மீ., துாரம் படகில் சவாரி செய்து குருசடை தீவில் உற்சாகமாக இறங்குகின்றனர்.

*வரவேற்கும் டால்பின்கள் :

படகில் குருசடை தீவுக்கு செல்லும் போது டால்பின்கள் துள்ளி குதித்து விளையாடுவதும், கடலில் படர்ந்து கிடக்கும் அழகிய பவளப்பாறைகள் சுற்றுலா பயணிகளை வரவேற்பதுடன் கடல் உலகத்திற்கே அழைத்துச் செல்லும் அனுபவம் ஏற்படுகிறது.தீவில் இறங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு டால்பின்களின் தத்ரூப சிலைகள், சுகாதாரமான காற்று, சுற்றுச்சூழல், அழகிய கடற்கரை கவர்கிறது.வாகன நெரிசல், புகை, சத்தம் இவற்றில் இருந்து விலகி மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி பெற வாருங்கள் குருசடை தீவு சுற்றுலாவுக்கு...

எப்படி போகலாம்

ராமேஸ்வரம் அருகே குந்துகால் கடற்கரையில் இருந்து வனத்துறை சுற்றுலா படகுகள் செல்கின்றன. ஒரு படகில் 12 பேர் செல்லலாம். ஒரு மணி நேரம் தீவுகளை சுற்றிப்பார்க்கலாம். கட்டணம் ஒரு நபருக்கு ரூ.300. 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டணம் கிடையாது. தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை படகுகள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

PR Makudeswaran
ஜன 16, 2024 21:34

சிங்கப்பூர் ஒகே. நம்ம போனா சும்மா இருப்போமா. சட்ட திட்டத்திற்கு கட்டுப் படுவோமா?


இளந்திரையன், வேலந்தாவளம்
ஜன 16, 2024 15:01

அருமை


Sathyam
ஜன 16, 2024 14:33

முதல்லயே இந்த தீவுக்கு இந்த நாதம் பிடிச்ச அருவருத்தக்க குருசடை பேரை எடுத்துட்டு வேற நல்ல ஹிந்து ஆன்மீக பெயர் வெக்கவேண்டும் அப்பா தான் இதுக்கு நல்ல முன்னேற வாய்ப்பு இருக்கு


rsudarsan lic
ஜன 16, 2024 10:30

Dinamalar does know who was behind this development. For that matter we do not want anything happening in India. Always US US


ராஜா
ஜன 16, 2024 09:49

இந்த தீவின் உண்மையான பெயர் என்னவோ?


Kalyan Singapore
ஜன 16, 2024 03:37

சிங்கப்பூர் அருகே ஆமை தீவு என்றும் ஜான் தீவு அன்றும் இரு தீவுகள் சுற்றுலாப்பயணிகள் செல்ல வசதியாக உள்ளன 40-80 பயணிகள் செல்லும் படகுகள் காலை 9.00 லிருந்து மதியம் 4.00 வரை செல்லவும் காலை 11.00 லிருந்து லிருந்து மாலை 6.00 வரை திரும்பி வரவும் இயங்குகின்றன . அதேபோல் உபின் தீவு என்ற ஒரு சிறிய தீவுக்கும் படகுகள் செல்கின்றன . விடுமுறை நாட்களில் பயணிகள் பொழுது போக்க நல்ல இடம் . அதுபோல் இங்கும் அமைத்தால் சுற்றுலா வளரும் மக்களும் மாலத்தீவு செல்ல வேண்டாம் .


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை