மேலும் செய்திகள்
பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்
19 minutes ago
தகவல் ஆணையரை தரக்குறைவாக பேசிய நபருக்கு கண்டிப்பு
21 minutes ago
ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
23 minutes ago
சென்னை:வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் மற்றும் கால்வாய்களை, 22.40 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:நீர்வள ஆதாரத் தொகுப்பு திட்டத்தில், தமிழகத்தில் உப வடிநில கூட்டமைப்பு முறையில், ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை மூலம், பாசன சேவை மற்றும் பாசன வேளாண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மேம்படுத்த, உலக வங்கி உதவியுடன், 2,547 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன.இதன் அங்கமாக, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கூவம் உப வடிநிலத்தின் கீழுள்ள முறைசார் மற்றும் முறைசாரா ஏரிகள், நீர் வழங்கு கால்வாய்களை, 22 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புனரமைத்து, நவீனப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கூவம் வடிநிலத்தில், 80 முறை சார்ந்த மற்றும் முறை சாரா பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் பாசனப் பரப்பு கொண்ட, 54 ஏரிகள் மற்றும் அதன் கால்வாய்கள், இத்திட்டத்தில் புனரமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் மறுகட்டமைப்பு செய்தல், சீர்படுத்துதல், ஏரிக்கரைகளைப் பலப்படுத்துதல், நீர் வழங்கு கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 6624.20 எக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19 minutes ago
21 minutes ago
23 minutes ago