உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ஐ கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0w0h1scy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உரிய தண்டனை

ஆம்ஸ்ட்ராங்- ஐ இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆதரவாளர்கள் போராட்டம்

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் மருத்துவமனை அருகே அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நேரத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விஜய் கண்டனம்

''ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்'' என தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவரும், நடிகருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

sankar
ஜூலை 09, 2024 22:47

வேங்கைவயல் குற்றவாளிகளிபோல விரைந்து பிடித்திடும் இந்த அரசு - ஆக நீங்கள் கவலை கொள்ளவேண்டாம் -


sankar
ஜூலை 09, 2024 22:47

வேங்கைவயல் குற்றவாளிகளிபோல விரைந்து பிடித்திடும் இந்த அரசு - ஆக நீங்கள் கவலை கொள்ளவேண்டாம் -


panneer selvam
ஜூலை 09, 2024 15:26

Arun IPS seems to be a motivation speaker not a police officer knowing real mentality of his force


Sathyan
ஜூலை 09, 2024 13:46

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவார் நம்ம ஸ்டாலின், கொடூர புத்தி உடையவர்கள் நம்ம திமுக கழகர்கள்.


Narayanan
ஜூலை 09, 2024 12:27

ஸ்டாலின் தொடர்ந்து பொய்யை கலந்தே பேசுகிறார். ஊடகம், போலீஸ் அவர் கைவசம் இருப்பதால் அவரும் எந்த கூச்சமும் இல்லாமல் வளைய வருகிறார். மத்திய அரசும் நமது ஆளுநரும் கை கட்டி வாய் பொத்தி இருப்பதும் அவருக்கு சௌகரியமாக இருக்கிறது. பொது மக்கள் நாம்தான் மத்தளம் மாதிரி அடிவாங்கிக் கொண்டு இருக்கிறோம் .


Kanagaraj M
ஜூலை 09, 2024 09:06

நமக்கெல்லாம் ஒன்றுமே தெரியாது என்று நினைத்து ஸ்டாலின் அவர்கள் வாயால் வடை சுட்டுக்கொண்டுள்ளார்.


Ramesh Sargam
ஜூலை 08, 2024 17:20

எல்லாரும் நல்லா சிரிங்க.


Ramesh Sargam
ஜூலை 08, 2024 16:55

இன்று ஜோக் அடித்து மக்களை மகிழ்விக்கிறார் தமிழக முதல்வர். புது போலீஸ் கமிஷனர் அருண் என்னவென்றால், லஞ்சத்தை, ரவுடியிசத்தை ஒழிப்பேன் என்று ஜோக் அடிக்கிறார்.


xyzabc
ஜூலை 08, 2024 11:21

plz talk to Bharathi for clues


Sainathan Veeraraghavan
ஜூலை 07, 2024 15:45

கண் சிவந்தார். தண்டனை உறுதி என்று பிதற்றினார்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி