உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடலூரில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டி

பா.ம.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடலூரில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ஒரு தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு திண்டுக்கல், அரக்கோணம், கடலூர், ஆரணி, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்கள் தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில் முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. காஞ்சிபுரம்(தனி) தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.இதன்படி.1.கடலூர்- இயக்குனர் தங்கர்பச்சான்2.திண்டுக்கல் - திலகபாமா3. அரக்கோணம்- கே.பாலு4.ஆரணி- கணேஷ்குமார்5.மயிலாடுதுறை-ம.க.ஸ்டாலின்6.விழுப்புரம்-முரளிசங்கர்7. கள்ளக்குறிச்சி- தேவதாஸ்8. சேலம்- அண்ணாதுரை9.தர்மபுரி-அரசாங்கம் ஆகியோர் போட்டியிட உள்ளனர். வேட்பாளர் பட்டியலில் அன்புமணி பெயர் இடம்பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சூரியா
மார் 23, 2024 08:27

தங்கர்பச்சான், எந்த ஒரு கட்சியையும் சாராமல், சுயேச்சையாக MP ஆவதற்குள் தகுதி படைத்தவர். வெல்வதற்கு வாழ்த்துக்கள்.


Anand
மார் 22, 2024 14:00

congratulations


duruvasar
மார் 22, 2024 11:21

அரக்கோணம் அல்லது ஆரணி தொகுதியில் ஏகே மூர்த்தியை நிறுத்தியிருக்கலாம் இரயில்வே துணை அமைச்சராக இருந்தபோது நல்ல பணிகளை செய்தார்


சூரியா
மார் 22, 2024 11:05

போட்டியிட்டு தோற்பதற்கு அன்புமணி என்ன முட்டாளா? நல்லவர் போல இப்பொழுது விட்டுக் கொடுத்து, ராஜ்யசபா உறுப்பினராகி, மந்திரியும் ஆகிவிடுவார்.


தமிழ் நாட்டு அறிவாளி
மார் 22, 2024 10:55

இன்னும் சாதியை நம்பி தான் பிழைக்க வேண்டி உள்ளதோ பெரிய முற்போக்கு சிந்தனையாளரா ஏன் காட்டிக்கொள்ள வேண்டும்? படம் எடுத்து மக்களை சுரண்டி திங்க வேண்டும்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை