உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தேசியவாதிகளை முடக்க முடியாது பா.ஜ., கண்டனம்

 தேசியவாதிகளை முடக்க முடியாது பா.ஜ., கண்டனம்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: அரசு சொத்துக்களை ஆக்கிரமிக்கும், தி.மு.க.,வினர் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ., மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் மணிகண்டன், புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பட்டப்பகலில் அவர் வீட்டு வாசலிலேயே, கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால், தி.மு.க., பிரமுகர் ஆறுமுகம் சரமாரியாக தாக்கியுள்ளார். நிலைமை இப்படி இருக்க, இரும்புக்கர ஆட்சி என, முதல்வர் ஸ்டாலின் பேசுவது வெட்கக்கேடானது. கொடூர தாக்குதல்களால் தேசியவாதிகளை முடக்க முடியாது. தாம் வகிக்கும் பொறுப்பில் சிறி தாவது அக்கறை இருந்தால், உடனே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தி.மு.க.,வின் பாசிச வெறி தாக்குதலுக்கு, பா.ஜ.,வினர் அஞ்ச மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ