உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3,500 சதுரடி வரை கட்ட அனுமதி தேவையில்லை கட்டட அனுமதிக்கு புது வசதி

3,500 சதுரடி வரை கட்ட அனுமதி தேவையில்லை கட்டட அனுமதிக்கு புது வசதி

ஒற்றைச்சாளர முறையில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணி எளிமைப்படுத்தப்படும். இதில், 2,500 சதுரடி பரப்பளவு நிலத்தில், 3,500 சதுரடி அளவிலான கட்டடங்கள் கட்ட, சுய சான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படும். இதன்படி, நில உரிமையாளர்கள் தரைதளம் அல்லது தரைதளத்துடன் முதல் தளம் வரையிலான கட்டடங்களுக்கு, உடனடி பதிவு அடிப்படையில், கட்டட அனுமதி பெற புதிய வசதி ஏற்படுத்தப்படும். இதன் வாயிலாக கட்டப்படும் கட்டடங்களுக்கு, கட்டட அனுமதி, பணி நிறைவு சான்று தேவையில்லை குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் வழியில், தமிழகத்தில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி, கட்டட விதிகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் விண்ணப்பங்கள், வரைபடங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், அதிகாரிகளின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், மக்கள் வீடு கட்டும் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால், சாதாரண வீடு கட்டுவோர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதால் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை