உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம்: நடிகர் வையாபுரி ஆசை

அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம்: நடிகர் வையாபுரி ஆசை

மதுரை : லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் அ.தி.மு.க.,வை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என, காமெடி நடிகர் வையாபுரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:அரசியலைப் பொறுத்தவரை வில்லன்கள் காமெடியனாகவும், காமெடியன்கள், வில்லன் மற்றும் ஹீரோக்களாகவும் ஆகி வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் நானும் ஹீரோவாக நடிப்பேன். லோக்சபா தேர்தலின்போது சூட்டிங் இல்லாமல் இருந்து, வாய்ப்பு வழங்கப்பட்டால் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.ஒரே கட்சி ஒரே கொள்கை கொண்டது அ.தி.மு.க., என் பிரசாரம் பிற கட்சிகளை வசைபாடுவதாக இருக்காது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், பழனிசாமி கொண்டுவந்த திட்டங்களை கூறி பிரசாரம் செய்வேன். நடிகர் சங்கம் கட்டடம் தொடர்பான கேள்விக்கு 'நடிகர் விஷால் தான் பதில் அளிக்க வேண்டும்' என்றார். தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தல் குறித்து பலர் பேசியுள்ளனர். நான் பேசினால் சரியாக இருக்காது. சிக்கலில் மாட்டிவிடாதீங்க. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை