உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் பத்திரங்கள் ரத்து; சம களம் உருவாக உதவுமா?; சிறப்பு விவாதம்

தேர்தல் பத்திரங்கள் ரத்து; சம களம் உருவாக உதவுமா?; சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது' என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, இதுவரை யார் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு பணம் நன்கொடையாக அளித்துள்ளனர் என்ற, முழு பட்டியலை பகிரங்கமாக வெளியிடுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், ‛‛ தேர்தல் பத்திரங்கள் ரத்து சம களம் உருவாக உதவுமா? குதிரைகள் ஓடிப்போன லாயமா?'' என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=FZ1FvTO1P4w


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Apposthalan samlin
பிப் 17, 2024 13:01

இதே மாதிரி ப்ரிமேமினிஸ்டர் கேர் வெளிப்பட தன்மை வேண்டும்


K.n. Dhasarathan
பிப் 17, 2024 11:37

இது போன்ற தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது ஏன் இதை தயாரித்தவர்களுக்கு தெரியாதா ?, தெரிந்துதான் செய்கிறார்கள் பொய் ஜே பி அரசு பல விஷயங்களை தப்பு தப்பாக்க செய்கிறது தெரியாமல் செய்பவர்களை மன்னிக்கலாம் , தெரிந்தே செய்பவர்களை ???, சம்பந்தப்பட்டவர்கள் பதவி விளக வேண்டும்


Seshan Thirumaliruncholai
பிப் 17, 2024 11:02

உண்டியல் நன்கொடை எல்லாமே ஒரு லாப நோக்கத்தில் பொதுவாக நடைபெறுபவை. இதில் விதிவிலக்கு மிகவும் மிகவும் மிகவும் குறைவு. தேர்தலில் பணம் செலவழிக்க கட்சிகளுக்கு அனுமதி உள்ளதை எடுத்துவிட்டால் மீறி நன்கொடை பெற்றால் நீதிமன்றம் தலைஇடுவதில் அருத்தம் உண்டு. தேர்தல் ஆணையம் தேர்தல் செலவிற்கு நன்கொடை பெற்றால் தவறு இல்லை. இந்த நன்கொடைக்கு வருமான வரி சலுகை வழங்கலாம்.


தத்வமசி
பிப் 17, 2024 09:48

வெளிப்படைத் தண்மை இல்லாத போது அதை தடுப்பது நியாயமே. மேலும் பல சட்டங்கள் அதை உருவாக்குபவர்களுக்கு சாதகமாக இருக்கவே கூடாது. உதாரணம் தன்னிச்சையாக சம்பளம், படி, வசதிகள் முதலியவற்றை தங்களுக்கு தாங்களே உயர்த்திக் கொள்வது. மக்களுக்கு அது போல உயருகிறதா என்பது இல்லை. ஆனால் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயருகிறது. எப்படி ? இது சேவை பதவி தானே. சம்பளம் எதற்கு ? அவர்களுக்கு ஏற்கனவே எல்லாமே இலவசம், அல்லது மிக மிக குறைந்த செலவில் எல்லாம் கொடுக்கப்படுகிறது. இருந்தும் அலவன்ஸ் என்கிற பெயரில் கோடி கோடியாக அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு தாங்களே ஏற்றிக் கொள்வது. அது போல அரசுப் பணியில்லாத பொதுப் பணியான சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பென்ஷன். இது கொடுமை. மேலும் எத்தனை முறை ஐந்தாண்டு காலம் உறுப்பினர்களாக இருந்தார்களோ அத்தனை முறை பென்ஷன். இது மகா கொள்ளையாக தெரிகிறது. இது போல வெளியில் வராத சட்டங்களை கட்டாயம் நீக்க வேண்டும்.


Ramesh Sargam
பிப் 17, 2024 09:32

எனக்குத்தெரிந்து எந்த கட்சியும் உண்மையான பட்டியலை ப்கிரங்கமாக வெளியிடமாட்டார்கள். வெளியிட்டால் சிக்கல்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை