உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா போதையில் கொலையா? கைது செய்யாமல் போலீஸ் மறைப்பது ஏன்?

கஞ்சா போதையில் கொலையா? கைது செய்யாமல் போலீஸ் மறைப்பது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் இரு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டதாக, கணவரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், முதல் தகவல் அறிக்கையில் முழு தகவல்கள் இடம்பெறாதது, சந்தேகத்தை கிளப்பியுள்ளது.கோவை, ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனியை சேர்ந்த பெயின்டர் தங்கராஜ், 40. மனைவி பிரிந்து சென்று விட, இரண்டாவதாக புஷ்பா, 38, என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஹரிணி, 9, ஷிவானி, 3, என இரு பெண் குழந்தைகள். குடிப்பழக்கத்துக்கு அடிமையான தங்கராஜ் தினமும் போதையில், புஷ்பாவிடம் சண்டையிட்டு வந்தார்.கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லவில்லை. வீட்டு வேலைக்கு சென்று வந்த புஷ்பாவிடம், மது குடிக்க தினமும் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். கடந்த, 7ம் தேதி இரவும் சண்டையிட்டார். மறுநாள் காலை புஷ்பா மற்றும் இரு குழந்தைகள், வீட்டு வளாகத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியில், சடலமாக மீட்கப்பட்டனர். மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.போலீசாரின் டி.எஸ்.ஆர்., அறிக்கையில், நெசவாளர் காலனி கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்தரிடம் சரணடைந்த தங்கராஜ், முதல் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளியதாகவும், குழந்தையை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய புஷ்பாவை, இரண்டாவது குழந்தையுடன் சேர்த்து தள்ளி, தொட்டியின் மூடியை மூடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.ஆனால், முதல் தகவல் அறிக்கையில், இதுகுறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. இது, பல விதங்களில்சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

கஞ்சா போதையில் கொலையா?

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், தங்கராஜிற்கு கஞ்சாபழக்கமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பிரச்னை, ஏற்கனவே விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், கஞ்சா புழக்கம் மேலும் தலைவலியை ஏற்படுத்தும் என்பதால், போலீசார் மூடி மறைக்கின்றனரோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

skv srinivasankrishnaveni
ஜூலை 11, 2024 08:28

என்னங்க இது இப்படி கேக்குறீங்களே போதைக்கு வழியேகாட்டும் கச்சிக்காரங்கள் கிட்டே ஷெம்ஷெம் போலீஸ் இருப்பது சி ம் கைலே போதைப்பொருட்களை விற்பவனாலும் குடும்பங்களிலே தான் காசு மட்டுமே போதுமாம் மக்கள் வோட்டுப்போட்டுட்டு செத்தால் லிஸ்ட் டு பாதர் என்பதுதான்கொள்கை கொள்ளை அடிக்கணும் கொடிலேபோராளனம் மக்கள் குடிச்சே சாவணும்


ram
ஜூலை 10, 2024 11:01

வரும் தேர்தலிலும் திருட்டு திமுகவுக்கு வோட்டு போட போறாங்க இதில் கஞ்சா இருந்தால் என்ன சிந்தெடிக் போதை பொருளாக இருந்தால் என்ன, இறந்து விட்டார்கள் .


raja
ஜூலை 10, 2024 09:52

தமிழகத்தை நம்பர் ஒன்னு மாநிலமாக மாற்றிய நமது இந்தியாவின் நம்பர் ஒன்னு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் இணையே கிடையாது...


A
ஜூலை 10, 2024 09:25

regular customer. so 10 lakhs avanukku koduppaanuva.. vidiyaa moonji arasiyal.


R vn
ஜூலை 10, 2024 09:02

welcome டு திராவிடன் மாடல்


Kalyanaraman
ஜூலை 10, 2024 07:29

எவ்வளவு நடந்தாலும் மக்கள் திருந்த போவதில்லை திரும்பத் திரும்ப இவர்களுக்கு காசு வாங்கி ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க போகிறார்கள். மறுபக்கம் 30% ஓட்டு போடாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு நாடு எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.


R.RAMACHANDRAN
ஜூலை 10, 2024 07:28

காவல் துறையில் உள்ள குற்றவாளிகளை கலையெடுப்பதோடு அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை அளித்தால் தவிர இந்த நாட்டில் குற்றங்கள் குறையாது.


Vijay
ஜூலை 10, 2024 06:16

திமுககாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அவர்களுக்கு முட்டு கொடுக்கும் ஊடங்கள்கள்.


sethu
ஜூலை 10, 2024 08:57

கேடு என தெரிந்தும் ஒட்டு போட்ட மக்கள் தானே அனுபவிக்கனும் இதுதான் பிற மதம் மற்றும் திமுகவின் பலம் .ஒற்றுமை இல்லாத கும்பல் ஹிந்துக்கள் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை