உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முதல்வர் ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு; ஜனவரி 21ல் விசாரணை

 முதல்வர் ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு; ஜனவரி 21ல் விசாரணை

தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் முறைகேடாக வெற்றி பெற்றதாகச் சொல்லி, அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையில், 'ஸ்டாலின் வெற்றி செல்லும்' என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றச்சாட்டு

இந்த உத்தரவை எதிர்த்து துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செப்., 25ல், இவ்வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, 'முதல்வர் ஸ்டாலின் முறைகேடு செய்து, கொளத்துார் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்றாரா? இந்த விவகாரத்தில், மனுதாரர் துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் என்னன்ன? அது தொடர்பாக, எந்தந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், ஒரு சிறிய குறிப்பாக தயார் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என சைதை துரைசாமிக்கு நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர். இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஒத்திவைப்பு

அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வழக்கை வேறு ஒரு தினத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்,” என கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் வழக்கின் விசாரணை, வரும் ஜன., 21ல் நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், முதல்வரின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

சிவகுமார்
டிச 12, 2025 15:56

வழக்கை வேறு ஒரு தினத்திற்கு ஒத்தி வைக்க வேண்டுகோள் - Granted! விசாரணை நூறு வருடங்கள் இழுத்தடிக்க வாழ்த்துக்கள்!!


N Sasikumar Yadhav
டிச 12, 2025 14:40

எதற்கு இவ்வளவு அவசரம் இன்னும் 25 ஆண்டுகள் பாக்கியிருக்கிறதே. விஞ்ஞான ரீதியாக ஆட்டய போட அனுமதித்துவிட்டு இப்போது எதற்கு விசாரணை. பேசாமல் வழக்கை வாபஸ் வாங்கிக்கனும் இந்த மானங்கெட்ட இந்துமத துரோக திமுக தலைமையிலான விடியாத திராவிட மாடல் அரசு


sankar
டிச 12, 2025 14:10

என்ன அவசரம் கோர்ட்டார் - இன்னம் ஒரு அரை நூற்றாண்டு ஆகட்டும்


DMK Thondan
டிச 12, 2025 12:21

நாங்க அப்படி ஏமாத்தி தாங்க ஜெயிப்போம் ,எங்களை ஒன்றும் செய்ய இயலாது


Ramki
டிச 12, 2025 12:04

இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன ... சுருட்ட வேண்டியதை சுருட்டி அடுத்த தேறுதலுக்கு ரெடி ஆயாச்சு ...


N S
டிச 12, 2025 11:55

வழக்கு 2011 வருடத்தின் தேர்தல் முறைகேடு பற்றி. பின்பு பல களம் கண்டு தன்னிகரில்லா திராவிட மாடல் முதல்வராக மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் அப்பா, அப்பா" என்று பாசத்துடன் அழைப்பை ஏற்று வளம் வந்து கொண்டிருக்கிறார். 10 நாட்கள் வாய்தாதான். தீர்ப்பு 10 வருடங்கள்லாகலாம். பொறுமை.


mohana sundaram
டிச 12, 2025 11:12

என்ன ஒரு அயோக்கியத்தனமான வழக்கு. ஐந்து ஆண்டுகள் நிறைவு நேரத்தில் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது என்றால் நம்முடைய நீதித்துறை எவ்வளவு கேவலமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்


Anand
டிச 12, 2025 11:02

ஜனவரி என உடனடி அவசரம் வேண்டாம், அடுத்த ஜென்மத்திற்கு தள்ளிவைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Barakat Ali
டிச 12, 2025 09:37

பதவிக்காலமே முடியப்போகுதே? வாழ்க இந்திய ஜனநாயகம் .......


திகழ்ஓவியன்
டிச 12, 2025 11:49

ஆல்ரெடி முடிந்து விட்டது இது சைதை துரைசாமி 2011 இல் போட்ட வழக்கு


duruvasar
டிச 12, 2025 09:35

வரும் காலத்தில் கபில் சிபாலின் மகன் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் .


மேலும் செய்திகள்





புதிய வீடியோ