உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்: கடலூர் மேயர் வீட்டில் ரெய்டு

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்: கடலூர் மேயர் வீட்டில் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடலூர் மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கடலுார் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வை சேர்ந்த சுந்தரி உள்ளார். இவரது கணவர் ராஜா தி.மு.க., மாநகர செயலாளராக உள்ளார். இவர் கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9rx6m372&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மாநகராட்சி மேயர் ஓட்டிற்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதியம் 1:30 மணியளவில் 3 கார்களில் வருமானவரி துறை அதிகாரிகள் திடீரென மாநகராட்சி மேயர் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்காததால், அதிகாரிகள் மதியம் 2:45 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kishore kumar ramanujam
ஏப் 18, 2024 19:05

அப்படி அப்பழுக்கற்ற வர்கள் ஏன் நைலான் வீட்டில் ரெய்டு செய்ய வில்லை மற்றும் தேர்தல் ரத்து செய்யவில்லை


கல்யாணராமன்
ஏப் 18, 2024 17:17

திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது ஆற்காடு வீராசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தினார்கள் அவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் வந்தவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார் கடைசியில் சிக்கியது பீரோ லாக்கரில் இருந்த ஒரு ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே என்ன நையாண்டி பாருங்கள் எவனோ ஒரு கருப்பு ஆடு முன்னமே தகவல் கொடுத்து நடத்தப்பட்ட ரெயிடை கேலிக்கூத்து ஆகிவிட்டான்


கல்யாணராமன்
ஏப் 18, 2024 17:05

இவர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக இவர்களே புகார் கொடுத்து சோதனை செய்யும்படி செய்து விட்டு சோதனையில்ஒன்றும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் வாயால் சொல்ல வைத்து தங்களுக்கு தாங்களே நன்னடத்தை சான்றிதழ் அளித்துக்கொள்வார்கள் இப்படியான போலி புகார் செய்த நபரை உள்ளே தள்ளி விசாரித்தால் யார் இந்த தகிடு தத்த வேலையை அரங்கேற்றியது என்று தெரிந்துவிடும்


Saai Sundharamurthy AVK
ஏப் 18, 2024 17:03

அதிகாரிகள் வருவார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே, அவர்கள் தங்கள் வீட்டில் பணத்தை வைத்துக் கொள்ள மாட்டார்கள். எங்காவது குடிசை பகுதிக்குள் உள்ள தங்கள் ஆட்களின் வீட்டில் மறைத்து வைத்து அவ்வப்போது தகவல் அனுப்பி அங்கிருந்து ஆட்களை வைத்து பணப் பட்டுவாடா செய்வார்கள். திராவிட கட்சிகளின் லட்சணம் அப்படித்தான்.....!!!


B MAADHAVAN
ஏப் 18, 2024 16:31

வேறு பக்கம் பணத்தை பதுக்கி விட்டு, கவனத்தை திசை திருப்ப இவர்களே வருமான வரி துறையினருக்கு தகவல் சொல்லி விட்டு அவர்களை வரவழைப்பார்கள் பின் கணக்கு எல்லாம் சரியாக உள்ளது என்று சொல்லி அனுதாபம் பெற முயற்சிப்பார்கள் அவர்கள் கணக்கை மேலோட்டமாக பார்க்காமல், நன்றாக துருவி பாருங்கள்


Rajathi Rajan
ஏப் 18, 2024 18:02

நீ வேண்டுமானால் அந்த கட்சி கரை வேட்டிக்குள் புகுந்து பாரு, இருந்தால் தெரியும் மாதவா


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை